அப்துல் காலிக்-ஆக STR, SJ சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் மாநாடு படத்தில் இணைகிறார் !!
வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி V ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிப்பில், STR நடிப்பில் மாநாடு படம் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இதில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து இயக்குகிறார். நேற்று படத்தில் STR பெயர் அப்துல் காலிக் என்ற செய்தி வெளியானது. தற்போது நடிகர் மனோஜ் பாரதிராஜா, டேனியல் பாப், Y.G மகேந்திரன் மற்றும் SJ சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு இருந்து துவங்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சபரிமலை பயணத்திற்கு பிறகு உடற்பயிற்சி, நீச்சல் என கட்டுக்கோப்பாக உடம்பை தயார் செய்து வருகிறார் சிம்பு. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர். சில்வா ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். “மாநாடு” ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. நேற்று STR 37 வது பிறந்தநாளை குடும்பத்தினரோடு கொண்டாடினர். அவருடைய பிறந்தநாள் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.