தொடரும் IT ரெய்டு வேட்டை…, சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல் !!
“கோபுரம் பிலிம்ஸ்” அன்புச்செல்வன் மதுரை வீடு மற்றும் அலுவலகத்தில் 15 கோடி !! சென்னையில் 50 கோடி வருமான வரி துறையினரால் பறிமுதல்.
‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புச்செல்வனுக்கு சொந்தமாக சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடுகளில் ரூ.65 கோடி பணம் சிக்கியது. இவர் சினிமா பைனான்சியராகவும் கடன் வழங்கி வருகிறார். இவர் வெள்ளைக்கார துரை, ஆண்டவன் கட்டளை, மருது, தங்கமகன் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். சில படங்களுக்கு கடன் வழங்கி உதவி செய்துள்ளார். தற்போது, அவர் மீது வருமான வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது. வருமான வரி அதிகாரிகள், அன்புசெல்வனுக்கு சொந்தமான மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகம், சென்னை தி.நகரில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் இரண்டாவது நாளாக நடந்த சோதனையில், மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.15 கோடியும், சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.50 கோடியும் வருமான வரி துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.