நாய்களுக்கு ரூ.14,500 கோடி வரி கட்டிய மக்கள்!!ஊரடங்கால் அதிகரித்த வருவாய்..எங்கு தெரியுமா ?

September 10, 2022 at 6:34 pm
pc

ஜேர்மனியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு அதன் உரிமையாளர்கள் வரி செலுத்த வேண்டும்.

ஜேர்மனியில் நாய் வரி வருவாய் 14,500 கோடிகளை எட்டியுள்ளது.

2020-ஆம் ஆண்டில் முதல் கோவிட் ஊரடங்கு விதிக்கப்பட்டபோது, மக்களை தங்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ​​பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வறுவதற்காகவே ஒரு நாயை வாங்கி வளர்க்க தொடங்கினர்.

2021-ஆம் ஆண்டின் இரண்டாவது முறை கோவிட் தொற்றுநோய் பரவியபோதும், இந்தப் போக்கு தொடர்ந்ததாகத் தெரிகிறது. இதனால் ஜேர்மனியில் உள்ள நகராட்சிகள் நாய் வரிகளிலிருந்து ஏராளமான வருவாயைப் பெற்றன.

2021-ஆம் ஆண்டில் ஜேர்மனியில் நாய் வரி வருவாய் 401 மில்லியன் யூரோக்களாக (இலங்கை பணமதிப்பில் ரூ.14,541 கோடிகள்) உயர்ந்தது.

வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாய இருந்ததாலும், வீட்டை விட்டு வெளியே செல்ல குறைவான ஓய்வு நேரங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், ஜேர்மனியில் உள்ள பல தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது செல்லப்பிராணிகளை நோக்கி திரும்பினர். நாய்களை வீட்டை விட்டு வெளி அழைத்துச் செல்வதே முக்கிய பொழுதுபோக்காக மாறியது.

இதனால், நாய்க்குட்டிகளுக்கான தேவையும் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக, 2020-ல் முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிக நாய்கள் வாங்கப்பட்டன. இதனால், வரி அலுவலகங்களுக்கு நாய் வரிகளில் மட்டும் 331 மில்லியன் யூரோக்கள் வசூல் குவிந்த்தாக German Canine Association தெரிவித்தது.

2021-ஆம் ஆண்டும் அதே போக்கு தொடர்ந்தது, கடந்த ஆண்டின் நாய் வரி 401 மில்லியன் யூரோக்களாக அதிகரித்து. 2011-ல், நாய் வளர்ப்பதற்கான வரியின் வருவாய் 275 மில்லியன் யூரோக்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு அதன் உரிமையாளர்கள் வரி செலுத்த வேண்டும் என்பது வெளிநாட்டினரை அடிக்கடி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website