மக்களே உஷார் !!LED TV வெடித்து சிறுமி பலி !!

October 6, 2022 at 5:05 pm
pc

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஓமேந்திரா. 16 வயது சிறுமியான இவரும், நண்பர் கரண், தாய், அவரின் சகோதரர் ஆகிய நான்கு பேர் வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் டிவி வெடித்துள்ளது. இதில் நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர். பின்னர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி ஓமேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்ற மூன்று பேருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டிலிருந்த LED TV வெடித்ததில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website