ஏற்கனவே திருமணம் ஆனவர்களுக்கு- இலவச திருமணம் செய்து வைத்து சர்ச்சையில் சிக்கிய விஷால்!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு எனவும் தடம் பதித்துள்ளார் விஷால். 40 வயதை தாண்டிய நடிகர் விஷாலுக்கு இன்னமும் திருமணம் நடைபெறவில்லை.
நடிகைகளுடன் கிசுகிசு
நடிகைகள் வரலட்சுமி, லட்சுமி மேனன், அபிநயா என சில நடிகைகளுடன் காதல் உறவில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டார் விஷால். இதனிடையே ஹைத்ராபாத்தை சேர்ந்த அனுஷா ரெட்டி என்பவருடன் கடந்த 2019ஆம் ஆண்டு விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இலவச திருமணம்
ஆனால் அந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லவில்லை. இந்நிலையில் நடிகர் விஷால் நேற்று 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார். சென்னையை அடுத்த மாத்தூரில் நடைபெற்ற விஷால் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்த இவ்விழாவில் விஷால் தாலி எடுத்து கொடுக்க திருமணம் நடந்தது.
திருமணத்தால் சர்ச்சை
இந்நிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்ட 11 ஜோடிகளில் சிலருக்கு பல மாதங்களுக்கு முன்பே திருமணம் முடிந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் திருமணம் ஆன ஜோடிக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளார் விஷால் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இது எந்தளவுக்கு உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.