ரோஸ் மில்கில் முக்கி எடுத்தது மாதிரி உங்களுடைய உடல் முழுவதும் அப்படியே பிங்க் நிறத்திற்கு மாறிடும். இதை மட்டும் ஒருமுறை சருமத்தில் தடவினால்…!!

உடல் முழுவதும் இருக்கக்கூடிய சருமம் பார்ப்பதற்கு அப்படியே பிங்க் நிறத்தில் மாறினால் யாருக்குத்தான் பிடிக்காது. அழகின் மேல் எல்லோருக்கும் அவ்வளவு ஆர்வம். நீங்கள் தற்போது இருக்கக்கூடிய நிறத்தை விட, இன்னும் கொஞ்சம் கூடுதல் நிறத்தைப் பெற, மிக மிக எளிமையான ஒரு குறிப்பு இது. உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த பேக் தயார் செய்து விடலாம். இந்த குறிப்பை ஏழு நாள் தொடர்ந்து போட்டு வந்தால் பெரிய வித்தியாசத்தை உணர முடியும். முதல் முறை போடும் போது சின்ன வித்தியாசம் தெரியும். வாங்க அந்த அழகு குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.
இரண்டு கைப்பிடி அளவு உளுந்தம் பருப்பை ஒருமுறை கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள். 2 மணி நேரம் ஊறட்டும். அதன் பின்பு அதை ஊற வைத்த தண்ணீரோடு சேர்த்து மிக்ஸி ஜாரில் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணீராக அரைக்க வேண்டாம். அரைத்த விழுது அப்படியே இருக்கட்டும்.
ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டை எடுத்து தோல் சீவி கழுவி துருவி பிழிந்தால் கொஞ்சம் பீட்ரூட் சாறு நமக்கு கிடைக்கும். தண்ணீர் ஊற்றாமல் பீட்ரூட் சாறு எடுக்க வேண்டும். சாறை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு அகலமான பவுலில் அரைத்து வைத்திருக்கும் உளுந்தை போட்டு, பீட்ரூட் சாறு, அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், கான்பிளவர் மாவு 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கலக்க வேண்டும். ஒரு பிங்க் நிறத்தில் சூப்பரான பேக் நமக்கு கிடைத்திருக்கும். இதை டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் 7 நாட்கள் கெட்டுப் போகாது.
தேவை என்பவர்கள் இதை முகம் கைகளுக்கு மட்டும் அப்ளை செய்து கொள்ளலாம். இல்லை எனக்கு உடல் முழுவதும் பிங்க் நிறத்திற்கு வேண்டுமென்றால் சோப்பு போட்டு குளிச்சிடுங்க. அதன் பின்பு உடம்பை ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு, இந்த கிரீமை உடம்பு முழுவதும் தடவி 15 நிமிடம் நன்றாக உங்கள் கையால் மசாஜ் செய்து பிறகு குளித்தால் உங்களுடைய சருமம் முழுவதும் பிங்க் நிறத்திற்கு மாறும்.
முகம், கழுத்து, கைகளில் இந்த பேக்கை முதலில் அப்ளை செய்து விட்டு, 15 லிருந்து 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடலாம். அதன் பின்பு காய்ந்த இந்த பேக்கை ஈரம் செய்துவிட்டு, வட்ட வடிவில் முகத்தையும் கழுத்தையும் கைகளையும் மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விட்டால் சூப்பரான கலர் கிடைக்கும். பாருங்க அப்படி பிங்க் நிறம் உங்களுடைய முகத்தோட ஒட்டிக்கும். ஒரு முறையிலேயே இந்த பிங்க் குளோவை உங்களால் கண்ணாடியில் பார்க்க முடியும். குறிப்பு பிடித்திருந்தால் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
தொடர்ந்து இந்த குறிப்பை மூன்று மாதங்கள் பின்பற்றி வரும்போது உங்களுடைய சருமம் நிரந்தரமாக வெள்ளையாகவே மாறிவிடும். அது மட்டுமல்லாமல் ஒரு ஷைனிங்கும் கிடைக்கும். மேக்கப் போடாமலேயே ஒரு அழகான லுக் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள். இதோடு மட்டுமல்லாமல் தினசரி உணவில் நிறைய பழங்கள், நீர்ச்சத்து உள்ள காய்கறிகள், பழச்சாறு, நட்ஸ் வகைகள், கீரை வகைகள் இவைகளை சாப்பிட்டு வரும்போது உங்களுடைய சருமத்தின் ஜொலி ஜொலிப்பு மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கும். முயற்சி செய்து பாருங்கள்.