அமெரிக்க பிரபலத்திற்கு பார்சலில் அனுப்பப்பட்ட சிறுவனின் தலை!!அதிர்ச்சி தகவல்

January 2, 2023 at 11:46 am
pc

அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்க பிரபலம் ஒருவருக்கு அனுப்பப்பட்ட பார்சலில் சிறுவன் ஒருவனின் துண்டிக்கப்பட்ட தலை இருந்ததை பார்த்து சுங்கத் துறை அதிகாரிகள் திகலடைந்துள்ளனர்.  

சுங்கத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி

அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் பெட்டி ஒன்றை ஸ்கேன் செய்து பார்த்த போது பார்சலில் எலும்பு துண்டங்கள் இருப்பதை அர்ஜெண்டினாவின் புவெனஸ் ஏர்ஸ் மான்டே கிராண்டே-வில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எச்சங்கள் கடத்தல் நடந்திருக்கலாம் என்ற அச்சத்தில் பெட்டியை திறந்து பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளே ஒன்பது வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டதாகக் கருதப்படும் ஒரு சிறுவனின் தலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பார்சலின் உள்ளே முதலில் ஸ்பைடர் மேன் முகமூடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அதனுடன் சேர்த்து துணியால் சிறுவனின் தலை ஒன்றும் அழகாக மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பார்சல் அமெரிக்காவில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் பிரபல பெண்மணி ஒருவரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பார்சலை அனுப்பியவர் போலியான அடையாளத்தை பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்ததுள்ளது.

பொலிஸார் விசாரணை

இந்நிலையில் அர்ஜென்டினாவில் உள்ள அதிகாரிகள், அந்தப் பெண் அந்தப் பெட்டியை அனுப்ப கோரினாரா அல்லது அவருக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் அர்ஜென்டினாவின் தடயவியல் மானுடவியல் குழு இந்த கண்டுபிடிப்பு பற்றிய கதிரியக்க ஆய்வுகளை மேற்கொண்டது மற்றும் அதன் தோற்றத்தை கண்டறிய முயற்சித்து வருகிறது.

இதற்கிடையில் இந்த வழக்கு தேசிய பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, அர்ஜென்டினாவின் நிதிக் குற்றத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website