45 வருடமாக பாடி வந்து…ஆடு மேய்த்த நங்கம்மாளுக்கு சினிமாவில் அடித்த ஜாக்போட் !! பாட வாய்ப்பளித்த பிருத்விராஜ்…
இணையத்தின் உதவியால் திறமையாளர்களின் கதவுகளை வாய்ப்பே தேடி வந்து தட்டுவது அதிகரித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி நங்கம்மா 45 வருடங்களுக்கு மேலாக தனது ஆழமான குரலால் மலையாள உலகம் முழுக்க இசை பிரியர்களை கட்டிப் போட்டிருக்கிறார் அவரின் வசீகரிக்கும் குரலுக்கு மயங்கிக் கிடக்கிறது மலையாள திரையுலகம்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அட்டப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் என்ற 60 வயது மூதாட்டியின் குரல் அந்தப் பகுதி முழுவதும் பிரபலம். மலைவாழ் இடத்தை சேர்ந்த மங்கம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டே பாடும் பாடலுக்கு அட்டப்பாடி கிராமமே மயங்கிக் கிடந்த நிலையில் அவரது குரல் தற்பொழுது ஒட்டுமொத்த கேரளத்தையும் கட்டிப்போட்டியுள்ளது.
நங்கம்மாள் குறித்து வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவ, இதனைப் பார்த்த மலையாள நடிகர் பிருத்விராஜ் அவரது இயக்கத்தில் தயாராகியுள்ள அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் கலக்காத என்ற பாடலை பாட வைத்துள்ளார்.
சென்னையில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டியோ ஒன்றில் நங்கம்மாள் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் சினிமாவைத் தேடிப் போகவில்லை என்றும் தன்னைத் தேடி சினிமா வந்துள்ளதாகவும் கூறுகிறார் நங்கம்மாள்.