“அத்துமீறிய முத்தம்”… இப்படியா இந்த பொண்ணு கத்தும்…!!!
தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து, தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெருமளவில் நடிகை ராஷ்மிகா பிரபலமானார். இதனை தொடர்ந்து மீண்டும் ராஷ்மிக்கா விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே இங்கேம் இங்கேம் காவலே என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பெருமளவில் பிரபலமாகி இருந்தவர் தான் நடிகை ராஷ்மிகா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ராஷ்மிக்காவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் என்ற படத்தில் ராஷ்மிகா நடித்து வருகின்றார். மேலும், தான் தமிழ் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக அவர் பல நிகழ்சிகளில் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ரசிகர் ஒருவர் அத்துமீறி முத்தம் கொடுத்ததாக வீடியோ ஒன்று பரபரப்பாக வைரல் ஆன நிலையில், அது சினிமாவுக்காக எடுக்கப்பட்ட காட்சி எனவும், அதில் உள்ள நடிகை ராஷ்மிகா இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு அங்கிருந்த ரசிகர் ஒருவர், அத்துமீறி முத்தம் கொடுத்துவிட்டு தப்பியோடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று உலா வந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரேய்மோ என்ற கன்னட படக்குழு, அந்த வீடியோவில் இருப்பது ரஷ்மிகா மந்தனாவே அல்ல எனவும், அது தங்களது பட நாயகியான ஆஷிகா ரங்கநாத் எனவும் தெரிவித்துள்ளது. அது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி எனவும் விளக்கமளித்துள்ளது.