சிக்கலில் திரிஷா, “இதே போல் செய்தால் சம்பளம் பறிக்கப்படும்”, தயாரிப்பாளர் டி.சிவா காட்டம்!!
28ம் தேதி வெளிவர இருக்கும் பரமபதம் விளையாட்டு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால் நடிகை த்ரிஷா பங்கேற்கவில்லை. இது குறித்து பேசிய தயாரிப்பாளர் டி சிவா, அடுத்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் த்ரிஷா நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்று எச்சரித்து பேசினார்.
அவர் மேடையில் கூறியது, ‘இன்று சூழ்நிலை காரணமாக வராமால் போயிருக்கலாம். ஆனால் அடுத்த வாரம் படம் ரிலீஸ், இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றால் த்ரிஷா வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி தரவேண்டிவரும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பாக எச்சரிக்கிறேன்’ என கூறியுள்ளார் டி.சிவா.