1500 ஊழியர்களை நீக்கும் ஓ.எல்.எக்ஸ் நிறுவனம்!!
பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு ஐடி நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஓ.எல்.எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 1500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்திற்கு ஏற்படும் அதிகப்படியான செலவை குறைக்கும் வகையில், இந்த பணி நீக்கம் நடைபெறுவதாக ஓ.எல்.எக்ஸ் கூறியுள்ளது.