அமுல் பால் வகைகளின் விலை உயர்வு!

February 4, 2023 at 8:29 am
pc

அமுல் பால் வகைகள் விலை உயர்வு பற்றிய அறிவிப்பை குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமுலின் அனைத்து வகை பால்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது புதிய விலை பட்டியலின்படி பால் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது. அமுல் டாசா 500 மிலி பால் 27 ரூபாய்க்கும், 1 லிட்டர் டாசா பால் ரூ.54க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமுல் டாசா 2 லிட்டர் மற்றும் 6 லிட்டர் முறையே ரூ.108 மற்றும் ரூ.324 ஆக அதிகரித்துள்ளது. அமுல் கோல்டு 500 மிலி பால் 33 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் அமுல் கோல்டு 66 ரூபாய்க்கும், 6 லிட்டர் அமுல் கோல்டு பால் ரூ.396க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமுல் பசும் பால் 500 மிலி 28 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் 56 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமுல் எருமைப் பால் 500 மிலி 35 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் ரூ.70, 6 லிட்டர் ரூ.420 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிக்கப்பட்ட விலை இன்று அமலுக்கு வந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website