AK62 விக்னேஷ் சிவன் விலகல்..

February 4, 2023 at 3:53 pm
pc

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில், AK62 மற்றும் அஜித்தின் கவர் போட்டோ உள்ளிட்டவற்றை நீக்கியுள்ளார். துணிவு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கதை உள்ளிட்ட சில காரணங்களால் அவரை படத்தில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே, இந்தப்படத்தை விஷ்ணுவர்தன், மகிழ் திருமேனி உள்ளிட்ட சில இயக்குநர்கள் இயக்குவார்கள் என உறுதியற்ற தகவல்கள் உலா வருகின்றன. இதனிடையே விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கம் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website