ரஜினி படத்தை பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டது சன்பிக்சர்ஸ் !!
ரஜினி நடிக்கும் 168 படம் அண்ணாத்த என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த பெயரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் மாலை 6 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரஜினிக்கு முதல் முறையாக டி இமான் இசையமைக்கிறார்.
ரஜினி ஏற்கனவே மன்னன் எனும் பெயரில் படம் நடித்திருப்பதால், மன்னவன் பெயரை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. இது அன்னத்தை ஆடுறார் ஓத்துக்கோ என்ற கமல் பாட்டில் வந்த “அண்ணாத்தை” சொல்லை டைட்டிலாக வைத்துள்ளதற்காக ரசிகர்கள் குஷியில் உள்ளனர். எனவே இந்த படத்தின் பெயரான அண்ணாத்த’ வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த படத்தின் டைட்டில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.