புத்தர் காதில் ஸ்பீக்கரை வைத்து காதலி கேட்ட நபர்….

சீனாவில் ஒரு நபர் 2000 கி.மீ பயணம் செய்து லெஷான் ராட்சத புத்தர் சிலை காதில் ஸ்பீக்கரைப் பிடித்து பணம் மற்றும் காதலி கேட்டு கத்திய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புத்தரிடம் பணம், காதலியை கேட்ட நபர்
சீனாவைச் சேர்ந்தவர் ஜாங், இவர் சுமார் 71 மீட்டர் உயர புத்தர் சிலையின் காதுக்கு அருகில் ஸ்பீக்கரைப் பிடித்து, புத்தர் தெய்வம் அவர் பேசுவது நன்றாக கேட்பதற்காக தனது தொலைபேசியின் ஒலியை அதிகரித்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஜாங், புத்தர் காதில் விழும்படி, புத்தரே, எனக்கு 27 வயதாகிறது, என்னிடம் கார், வீடு, காதலி இல்லை என்று கத்துகிறார்.

இதன் பிறகு, புத்தரிடம் தன்னுடைய விருப்பங்களை பட்டியலிடுகிறார். எனக்கு பணம் வேண்டும். நேசிக்க காதலியை கேட்கிறார், அவள் கொஞ்சம் அழகாகவும், மென்மையாகவும், என்னை மில்லியன் கணக்கில் நேசிக்க வேண்டும் என்று பேசுகிறார்.

தற்போது வைரலாகும் இந்த வீடியோ இதுவரை 168 மில்லியனுக்கும் அதிகமான பார்வையிட்டுள்ளனர்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் கமெண்ட்களை செய்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், “மற்றவர்களை நம்புவதற்கும் தன்னை நம்புவதற்கும் இடையில், அவர் புத்தரை நம்பியிருப்பதைத் தேர்ந்தெடுத்தார் என்று கமெண்ட் செய்தார்.