லியோ ட்ரைலர் அப்டேட் ..

October 3, 2023 at 6:05 pm
pc

தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் திசையில் உருவான ‘லியோ’ படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற இருந்த நிலையில் திடீரென ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். ஆனால் அடுத்தடுத்து ‘லியோ’ படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டு படக்குழுவினர் விஜய் ரசிகர்களை திருப்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் ‘லியோ’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website