2ஆவது குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்.

தமிழ் திரையுலகின் நடிகரும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் ’அபியும் நானும்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். இதனை அடுத்து கமல்ஹாசனின் ’உன்னை போல் ஒருவன்’ உட்பட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2015 ஆம் ஆண்டு நிஷா கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணேஷ் – நிஷா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். மீண்டும் பெற்றோர் ஆகி உள்ளதை அடுத்து எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் தாயும் மகனும் நன்றாக இருக்கிறார்கள் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.