மீண்டும் ஜி வி உடன் இணையும் திவ்யபாரதி

October 9, 2023 at 6:50 pm
pc

ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்ய பாரதிக்கு மீண்டும் ஒரு மாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் திவ்யபாரதி நாயகியாக நடித்திருந்தார் என்பதும் சுப்புலட்சுமி என்ற அவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே

இந்த படத்தை அடுத்து தற்போது அவர் கதிர் ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷின் 25வது திரைப்படத்தில் திவ்யபாரதி ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். ’கிங்ஸ்டன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த ’காதலிக்க யாரும் இல்லை’ என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

மிகப்பெரிய பட்ஜெட் உருவாகும் இந்த படத்தில் மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் திவ்ய பாரதி நடிப்பதால் இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website