வலிமை படத்தில் தல அஜித் ஓட்டிய 300 கி.மீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் உடைய சுசூகி B-king பைக் !!
பைக் பிரியரான தல அஜித் எப்போதும் 1000CC-க்கும் அதிகமான பைக்கை விரும்புகிறார். மங்காத்தா படத்தில் CBR fireblade பைக்கை ஓட்டி ஸ்டண்ட் செய்து அசத்தினார். தல அஜித் எந்த பைக் ஓட்டி வந்தாலும், அது என்ன பைக், என்ன பவர், அதன் விலை, பிராண்ட் என்ன என தேடித் தேடி தெரிந்துகொள்வதே ரசிகர்களின் வழக்கம்.
தற்போது அஜித் நடித்துவரும் ‘வலிமை’ திரைப்படத்திலும் மாஸான பைக் காட்சிகள் உள்ளது. அஜித் செம கிளாஸான பைக்கை பயன்படுத்தவுள்ளார். ஸ்டண்ட் காட்சிக்காக Suzuki B King GSX1300 என்ற பைக்கை பயன்படுத்தியுள்ளார். இந்த பைக் 300 கிமீ வேகத்தில் பறக்க கூடிய ஆற்றல் உடையது. இது தான் அஜித் ஓட்டும் பைக் என இணையத்தில் புகைப்படம் ஒன்று பறவிவருகிறது.
ஷூட்டிங் தலத்தில் ஒரே மாதிரியான KTM பைக்குகள் இருக்க, ஒரு பைக் மட்டும் மாஸாக இருந்துள்ளது. அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வளம் வருகிறது. இதன் விலை ரூ. 10 லட்சம் அவருடைய பைக் ஷாட் இனி தான் எடுக்கப்படவுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.