அமெரிக்காவில் சிறார் காப்பக ஊழியருக்கு 707 ஆண்டுகள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

November 20, 2023 at 7:55 pm
pc

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய ஊழியர் ஒருவருக்கு 707 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தமது பொறுப்பில் விடப்பட்ட சிறார்களில் 16 பேர்களை துஸ்பிரயோகம் செய்ததுடன், ஆபாச காட்சிகளை காணொளியாக பதிவும் செய்துள்ளார்.

இந்த வழக்கில் சிக்கிய 34 வயது Matthew Zakrzewski மீது 34 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்தது. 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 2 முதல் 14 வயதுடைய சிறார்களை Matthew Zakrzewski சீரழித்துள்ளதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் 2019 மே மாதத்தில் தான் 8 வயது சிறுவன் தொடர்பில் பெற்றோர் Matthew Zakrzewski மீது பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த நபரால் 2014 முதல் தெற்கு கலிபோர்னியா முழுவதும் 11 சிறார்கள் சீரழிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளதுடன், வேலியே பயிரை மேய்ந்த நிலை என்றார். ஆனால் நடந்த சம்பவத்திற்கு வருந்துவதற்குப் பதிலாக Matthew Zakrzewski நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்,உங்கள் பிள்ளைகள் முகத்தில் புன்னகையை வரவழைக்க நான் முயன்றேன், நாங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்து நல்ல நேரங்களும் 100 சதவீதம் உண்மையானவை என குறிப்பிட்டுள்ளார்.மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்க தவறிய Matthew Zakrzewski, தான் உண்மையாக நடந்துகொண்டதாக மட்டுமே தெரிவித்துள்ளார்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website