கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத சோள ரொட்டி! டைம் இருந்தா செய்து சாப்பிடுங்க!

November 26, 2023 at 8:38 pm
pc

பொதுவாகவே அனைவருக்கும் கொலஸ்ரால் என்பது சீக்கிரமாக வரும். வெவ்வேறு உணவுகள் கொலஸ்ட்ராலை பல்வேறு வழிகளில் குறைக்கின்றன.

சில கரையக்கூடிய நார்ச்சத்தை வழங்குகின்றன, இது கொலஸ்ட்ராலையும் அதன் முன்னோடிகளையும் செரிமான அமைப்பில் பிணைக்கிறது.

அந்தவைகயில் மகராஷ்ட்ரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற வட மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் சோள ரொட்டி எப்படி கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சோள ரொட்டி

உடல் எடை குறைக்க சிறுதானிய ரொட்டிகளையும் சாப்பாத்திகளையும் பலரும் சாப்பிட்டு வருகிறார்கள். கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு முதல் உடல் எடை குறைப்பு வரை பலவற்றுக்கும் உதவியாக இருக்கிறது சோளம். 

சோள ரொட்டை எவ்வாறு உடலுக்கு உதவுகிறது என்று தெரிந்துக்கொள்வோம்.

  • சோளத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதோடு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் உருவாகவும் உதவுகிறது.
  • உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவதற்கு உதவுவதோடு இதயத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். 


    சோளம் இயற்கையாகவே க்ளூட்டன் இல்லாத உணவு. க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.


    சோளத்தில் டேனின்ஸ் மற்றும் அந்தோசைனின்ஸ் என்ற கலவைகளும் ஆண்டி ஆக்சிடெண்டும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி கொலஸ்ட்ரால் அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைவதற்கும் உதவும். 
  • இது நமது ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மெதுவாகவே வெளியேற்றும். சர்க்கரை அளவு உயர்வதை தடுக்கிறது.


    மாக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. இது நரம்பியல் சேர்ந்த நோயையும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website