நடிகை கெளதமி அளித்த நில மோசடி புகாரில் திடீர் திருப்பம்.
நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களான அழகப்பன், அவரது மனைவி மாச்சியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் சதீஷ்குமார் உட்பட 6 பேரை கேரளாவில் உள்ள திருச்சூரில் வைத்து கைது செய்துள்ளனர்
கடந்த செப்டம்பர் மாதம் நடிகை கௌதமி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில மோசடி குறித்த புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் தனக்கு சொந்தமான சொத்துக்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்,.
இந்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அழகப்பன் மற்றும் அவரது மனைவியின் விசாலாட்சி உள்பட 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல நாட்களாக இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் இவர்களை தேடி வந்தனர். அதுமட்டுமின்றி அவர்களுடைய வீட்டில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர்.