மனிஷா யாதவ்வின் வாட்டர் புகைப்படங்கள்.

2023 ஆம் ஆண்டு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டின் வாட்டர் பேபி நான்தான் என்று சொல்லாமல் சொல்லியுள்ள நடிகை மனிஷா யாதவ், இந்த ஆண்டு தான் சென்ற பிக்னிக் ஸ்பாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். பிகினியுடன் கூடிய இந்த கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
நடிகை மனிஷா யாதவ் ’வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’ஆதலினால் காதல் செய்வீர்’ ’ஜன்னல் ஓரம்’ ’பட்டைய கிளப்பணும் பாண்டியா’ ’த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ’சென்னை 600022’ படத்தின் இரண்டாம் பாகம், ’ஒரு குப்பை கதை’ ’சண்டி முனி’ போன்ற படங்களில் நடித்தார்.

இதையடுத்து அவர் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு திரை உலகில் இருந்து விலகிவிட்டார். இருப்பினும் அவர் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த ஆண்டு சென்ற அருவிகள், கடல் உள்ளிட்ட பிக்னிக் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படங்கள் உள்பட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.



