விஷால் வாழ்க்கையில் விளையாடிய 3 நடிகைகள்!
46 வயதாகும் நடிகர் விஷால் ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக இருப்பதால் செல்லமே, சண்டக்கோழி போன்ற படங்களில் இவரை பார்க்கும்போது ரசிகைகள் மட்டுமல்ல நடிகைகளும் அவரை சுற்றி சுற்றி வந்தனர். அதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்த மூன்று நடிகைகளும் விஷாலை திருமணம் செய்து கொள்வது போல் நெருக்கமாக பழகி ஆசை காட்டி மோசம் செய்தனர். இதனால் இப்போது திருமணமே வேண்டாம் என வெறுத்து போய் விட்டார்.
ரீமா சென்: பிரபல தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டியின் மகன் ஆன விஷால் தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இந்த படத்தில் விஷால் மற்றும் ரீமாசென் இருவரும் கணவன் மனைவியாக நடித்தனர். முதல் இடத்திலே இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா! என ஆச்சரியப்படும் அளவுக்கு ரீமா சென் உடன் விஷால் கொஞ்சம் நெருக்கமாகவே நடித்தார். அதைத்தொடர்ந்து தன்னை ஆக்ஷன் ஹீரோவாக காட்டிய திமிரு படத்தில் ரீமாசென் தான் விஷாலுக்கு ஜோடி போட்டார். ஒரு கட்டத்தில் ரீமாசென்னை திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டார். ஆனால் அவர் விஷாலை நண்பராக நினைப்பதாக சொல்லி கிளம்பிவிட்டார்.
லட்சுமி மேனன்: பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரியான லட்சுமி மேனன், விஷாலை கைக்குள் போட்டுக்கொண்டு தொடர்ந்து அவருடன் பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் ஜோடி போட்டார். அதிலும் நான் சிவப்பு மனிதன் படத்தில் பிஞ்சிலை பழுத்தது போல் லட்சுமி மேனன் வான்டட் ஆகவே விஷாலை லிப் லாக் செய்யும் சீனை பார்க்கும்போதே கண் கூசும் அளவிற்கு இருக்கும். இவர்களது கெமிஸ்ட்ரி திரைக்குப் பின்னாலும் தொடர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு விஷாலை லட்சுமி மேனன் கழட்டிவிட்டார். அவருக்கு செஞ்ச துரோகத்தால் தான் இப்போது லட்சுமி மேனன் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து தவிக்கிறார்.
வரலட்சுமி சரத்குமார்: ‘இதுதான் பொண்ணு, இதுதான் மாப்பிள்ளை’ என ஊரே சொல்ற மாதிரி நெருக்கமாக விஷாலும் வரலட்சுமியும் பழகிக் கொண்டிருந்தனர். ஹீரோயின்கள் எல்லாம் வேண்டாம் என சண்டைக்கோழி 2 படத்தில் தனக்கு வில்லியாக நடித்த வரலட்சுமியை உருகு உருக காதலித்தாலும் கடைசியில் அவரும் விஷாலுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இப்படி தொடர்ந்து மூன்று நடிகைகளும் ஆறடி தம்பிக்கு ஆப்படித்து விட்டனர். இதனால் காதலும் வேணாம் கல்யாணமும் வேண்டாம்னு, இப்போது சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல சமீபத்தில் மக்கள் நல இயக்கம் என்ற கட்சியையும் துவங்கி பொது மக்களுக்கு சேவை செய்ய களம் இறங்கி இருக்கிறார்.