ஆர்யா – சயீஷா நடிக்கும் “டெடி” படம் ஹாலிவுட் “TED” படத்தோட காப்பியா ?
ஆர்யா தனது ரியல் ஜோடியான சயீஷா உடன் நடிக்கும் படம் “டெடி”. இந்த படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் போஸ்டரில் ஆர்யாவுடன் ஒரு கரடி பொம்மை நிற்பது போல் போஸ் உள்ளது. மேலும் இந்த படம் ஹாலிவுட் படமான “Ted” படத்தை போல் உள்ளது, ஹாலிவுட்-ல் மார்க் வால்பஹெர்க் மற்றும் மிலா குனிஸ் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஹாலிவுட் படத்தில் நடித்த கதாபாத்திரத்தை தழுவி தான் ஆர்யாவும் சயீஷாவும் நடிக்க உள்ளார்கள் என பேசப்படுகிறது.
ஆர்யா நடிக்கும் இந்த படத்தை டிக் டிக் டிக், மிருதன் போன்ற படங்களில் இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். படத்தின் இசையை D.இமான் கொடுத்திருக்கிறார், மேலும் படத்தில் காமெடி நடிகர் சதிஷ், கருணாகரன் ஆகியோர் உள்ளனர். இன்று படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.