கண்ணீர் விட்டு அழுதார் !! மரணப்படுக்கையில் தனது ரசிகரை சந்தித்த நடிகர் கார்த்தி !!
தனது ரசிகரின் மரணத்தில், கார்த்தி கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
மக்கள் மட்டும் ரசிகர்களின் நன்மதிப்பை எப்போதும் தன்வசம் வைத்துக்கொள்வதில் சிவகுமாரின் இளையமகன் கார்த்தி ரொம்ப இளகிய மனம் உள்ளவர். எந்த வித ஆர்பரிப்பும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இருக்கும் நட்சத்திர நடிகர் கார்த்தி. மக்கள் நல பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா, நேற்று இரவு உளுந்தூர்பேட்டை சாலை விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். வியாசை நித்தியாவின் மரண செய்தியை கேட்டவுடன் இன்று அதிகாலை அவரது உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார். பிரிவால் வாடும் வியாசை நித்தியாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். கார்த்தி கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.