தனது வாரிசை சினிமாவில் அறிமுகப்படுத்தும் சந்தானம் !!
தற்போது நடிகர்கள் பலர் தான் நடிக்கும் போதே தனது வாரிசுகளுக்கும் வாய்ப்பு அளிக்கும் விதமாக சினிமாவில் அறிமுக படுத்துவார்கள், அதேபோன்று நடிகர் சந்தானமும் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளார்.
சின்னத்திரையில் சின்ன சின்ன காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து பின்னர் படிப்படியாக தனது காமெடி திறமையால் உயர்ந்து தமிழ் திரையுலகில் பெரும் காமெடி நடிகராக கால்பதித்தவர் சந்தானம். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்கள் உடனும் காமெடியில் கலக்கியவர். அதன் பிறகு ஹீரோவாக களமிறங்கி அதிலும் பட்டையை கிளம்பி வருகிறார் சந்தானம். ஹீரோவாக நடிக்க தொடங்கியதற்கு பின் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என காமெடியை ஓரங்கட்டினார் இருந்தாலும் அவர் படம் என்றால் ரசிகர்கள் காமெடியை எதிர்பார்த்து தான் செல்வார்கள் அதற்கு பஞ்சமில்லாமல் அவர் படங்களில் காமெடி பலமாக இருக்கும்.
தற்போது சந்தானம் ஹீரோவாக டிக்கிலோனா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான விஜய் ஆனந்த் இயக்க உள்ளார். இந்த படத்தில் சந்தானம் தனது மகனை நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.