2019-2020 இல், 304 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்கள் – ரூ .30.40 கோடி நிதி ஒதுக்கீடு !!!
சென்னை: வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வட்டார அளவில் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க தமிழக அரசு 30.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. வட்டார அளவில் ஒரு வாடகை மையம் அமைக்க 40% மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .
தமிழகத்தில் 1510 வட்டார அளவிலான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ,நடப்பு நிதியாண்டில் 304 மையங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது . வாடகை மையம் அமைக்க விரும்புவோர் தங்களது பகுதியில் உள்ள வேளாண் பொறியாளர் அலுவலகத்தை அல்லது மாவட்ட அளவிலான செயற் பொறியாளர் அலுவலகத்தையோ அணுகி பயன் பெறுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது .