காபிய கொட்டுனதுக்கு ரூ.7 லட்சம் அபாரதமா ? ஐரோப்பிய விமான நிறுவனத்துக்கு வந்த சோதனை !!

விமானத்தில் பயணித்த சிறுமி மீது காபி கொட்டியதால், ரூ. 7லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஐரோப்பா விமான நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.
ஸ்பெயின் நாட்டின் மல்லோர்காவில் நகரில் இருந்து, தனது அப்பாவுடன் ஆறுவயது சிறுமி ஒருவர், ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது சிறுமி விமானத்தில் காபி கேட்டுள்ளார். காபியை சிறுமிக்கு வழங்கும் போது எதிர்பாராத விதமாக சிறுமியின் தொடையின் மீது கொட்டியது. இதனால் சிறுமியின் தொடை பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விஷயத்தை லேசாக விடாத சிறுமியின் தந்தை ஐரோப்பிய நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்தார். ஃபார்முலா 1 டிரைவர் நிகி லாடாவால் நிறுவப்பட்ட சமீபத்தில் திவாலான ஆஸ்திரிய கேரியரான நிகி என்ற ஐரோப்பிய விமான நிறுவனத்தின் மீது அந்த வழக்கு போடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அந்த விமான நிறுவனம் பொறுப்பேற்காது, விமான அதிர்வினால் தவறுதலாக கூட கொட்டி இருக்கலாம் என நீதிமன்றத்தில் வாதாடியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இறுதியில் பயணிகளுக்கு தங்கள் சேவையை செய்யும் போது எந்த பிரச்சனை நேர்ந்தாலும் அதற்கு முழு பொறுப்பையும் அந்த விமான நிறுவனம் தான் பொறுப்பேற்கவேண்டும் என தீர்ப்பளித்தது. மேலும் அந்த விமான நிறுவனம் ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வாங்க வேண்டும் என உத்தரவிட்டது.