இனிமே அந்தமாதிரி நடிக்க மாட்டேங்க !! – ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இனி அந்தமாதிரி வேடத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து மலையாளம், தெலுங்கு என வெவ்வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.
சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்ல என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகிறார்.