ரஜினி, அஜித், விஜய் Forbes பட்டியலில் 2019ம் ஆண்டின் இந்தியாவின் அதிக வருமானம் வாங்கும் பிரபலங்கள் !!
இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்கள் பட்டியல் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்பட நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பலர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ் வெளியிடுவது வழக்கம் அதேபோல 2019-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்கள் பட்டியலை அவர்களின் புகழ், ஆண்டு வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இந்திய கிரிகெட் வீரர் விராட் கோலி உள்ளார். அவரது 2019ம் ஆணடு வருமானம் ரூ.252 கோடி ஆகும். இரண்டாவது இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளனர். ஓய்வு பெற்ற பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி ரூ.135.93 கோடி வருமானத்துடன் 5வது இடத்தை பிடித்துள்ளார். பெரும்பாலும் பாலிவுட் நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் இடம் பிடித்த இந்த பட்டியலில் தமிழ் திரையுலகினரும் இடம் பிடித்துள்ளார்.
அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (ரூ.100கோடி வருமானம்) 13வது இடத்தையும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (ரூ.94.8 கோடி வருமானம்) 16வது இடத்தையும், தளபதி விஜய் (ரூ.30 கோடி வருமானம்) 47வது இடத்தையும், தல அஜித் (ரூ.40.05 கோடி வருமானம்) 52வது இடத்தையும், இயக்குனர் ஷங்கர் (ரூ.31 கோடி வருமானம்) 55வது இடத்தையும், உலக நாயகன் கமலஹாசன் (ரூ.34 கோடி வருமானம்) 56 வது இடத்தையும், நடிகர் தனுஷ் (ரூ.31.75 கோடி வருமானம்) 64 வது இடத்தையும், இயக்குனர் சிறுத்தை சிவா (ரூ 2.17 கோடி வருமானம் ) 80 வது இடத்தையும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் (ரூ.13.5 கோடி வருமானம் ) 84 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.