மலையாள பொண்ணுக்கு தமிழ் பையன்…பிக் பாஸ் கவின் “பிகில்” நடிகையுடன் இணைகிறார் !!
‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கவின். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். வெள்ளித்திரையில் சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவர் ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் படம் ஓரளவு ஓடியது மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்கிறார்,
கவினுக்கு தற்போது இரண்டாவது படம் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் வினீத் இயக்குகிறார். ஏகா (Ekaa) எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக, பிகில் திரைப்படத்தில் நடித்து பலரின் அபிமானங்களை பெற்ற அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இவர் பிகில் படத்தில் கால்பந்து அணியின் கேப்டன் ஆக நடித்தது குறிப்பிடத்தக்கது. மலையாள வசம் வீசும் அமிதாவும் தமிழ் பையன் கவினும் ரொமான்ஸ் செய்ய உள்ளனர்.
இந்த படம் ஹார்ரோர் திரில்லர் வடிவில் இருக்கும் என படக்குழு தெரிவித்தது.