அனுஷ்காவை மேடையில் அழவைத்த இயக்குனர்… மேடையில் நடந்த சோகம் !!
அருந்ததி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்த அனுஷ்கா பாகுபலி படத்திற்க்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி இடைவெளி எடுத்துக்கொண்டார்.
அதன்பிறகு தற்போது ஹாலிவுட் தரத்தில் உருவாகிவரும் நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிசப்தம் படத்தில் விளம்பரத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் நடிகை அனுஷ்கா.
சம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரை பற்றி ஒரு வீடியோ காட்டினார்கள்.
அதை பார்த்துவிட்டு அனுஷ்கா அழ ஆரம்பித்துவிட்டார். காரணம் அந்த வீடியோ கிளிப்பிங்கில் அருந்ததி பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இருந்தது தான்.
கடந்த வருடம் பிப்ரவரியில் அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா காலமானார்.
அவரை நினைத்து தான் அனுஷ்கா கண்ணீர் சிந்தியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் நிலைநாட்டியது இந்த படம் தான். அருந்ததி மூலமாக புகழில் உச்சிக்கே சென்றார் அனுஷ்கா. அவரது மரணத்தை தாங்க முடியாமல் தான் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அரங்கில் இருந்த அனைவரும் அனுஷ்காவை பார்த்து கண்கலங்கிவிட்டனர். இறுதியாக அனுஷ்காவை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.