ட்விட் போட்டு சிக்கிய AR முருகதாஸ்’ கைகோர்த்து கலாய்த்து தள்ளும் சூர்யா, அஜித் ரசிகர்கள் !!
முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சிறந்த படங்களையும் தேர்தெடுத்து தயாரித்து வருகிறார். அந்தவகையில், பூவரசன் பீப்பி எனும் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், இயக்குனர் ஹலிதா ஷமீம். அவர் தற்போது சூர்யா தயாரிப்பில் “சில்லுக்கருப்பட்டி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சமுத்திரகனி, நடிகை சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா அர்ஜுன், நிவேதிதா சதிஷ் , மணிகண்டன் ஆகியோரும் நடித்துள்ளனர். நேற்று திரையில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன், ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என 4 திறமையான ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த படம் 4 விதமான காதல் கதையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. மேலும் சென்னை இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் சிறந்த படங்களுக்காக தரவரிசை பட்டியலில் 2ம் இடத்தை பெற்றும் சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, “சில்லுக்கருப்பட்டி படம் அற்புதமாக இருப்பதாக கேள்விப்படுகிறேன் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ‘ஓ ..கேள்விதான் பட்டீங்களா, அப்போ படத்தை பாக்கல நல்ல படத்தையெல்லாம் பாக்காதீங்க என சிலரும், ‘ஒரு சிலர் ஆமாம் கதையை யாரிடம் இருந்தும் திருடாமல் படம் எடுத்து இருக்காங்க’ எனவும் கண்டபடி கலாய்த்து உள்ளார்கள். சூர்யா ரசிகர்கள் சிலர் ‘தலைவர் சூர்யா தயாரிச்சா நல்ல படமா தான் இருக்கும்’ என டேவிட் செய்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் கைகோர்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.