அரியலூரில் சக மாணவிகளுக்கு ஊத்தி கொடுக்கும் கலாச்சாரம்…, மதுவால் சீரழியும் மாணவிகள் !!

சமீபகாலமாக மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தற்போது அரியலூரில் மாணவிகள் சிலர் கூட்டாக வெட்ட வெளியில் உட்கார்ந்துகொண்டு பீர் பகிர்ந்து குடிக்கும் வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் 12 வகுப்பு மாணவிகள் 5 பேர் கையில் பாட்டிலோடு மதுவை பகிர்ந்து குடித்தனர். இந்த வீடியோவை வாட்ஸாப் மற்றும் ட்விட்டரில் வேகமாக பரவிவருகிறது. தங்கள் வீட்டு பிள்ளைகள் நன்றாக படித்து முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கும் பெற்றோர்களிடையே இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை கொடுக்கிறது.