அரசு மருத்துவமனையில் நோயால் அவதிப்படும் பிரபல நடிகை!! குழந்தைக்கு பீஸ் கட்டக்கூட வழியில்லாமல் தவிப்பு !!
தமிழில் ‘நல்லதொரு குடும்பம்’, ‘உன்னை கண் தேடுதே’ ஆகியபடங்கள் நடித்த நடிகை ஷர்மிளா என்பவர் மலையாளத்தில் காபூல்வாலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கடைசியாக விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு எலும்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டுமென கூறியுள்ளனர். முதலில் தயங்கிய அவர் பின்னர் அனுமதியாகி சிகிச்சைபெற்றுவருகிறார். ஆனால் அவர் ஒரு நடிகை என்பது அங்கு யாருக்கும் தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் யாருடனும் பேசாமல் இருந்த அவரை ஒரு சில நபர்கள் நடிகை என அடையாளம் கண்டுள்ளனர். அவரை பார்ப்பதற்கு கூட யாரும் வரவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்த போது, ஷர்மிளா கேரளாவை சேர்ந்தவர். அவருக்கு இருமுறை திருமணமாகி விவகாரத்தாகியுள்ளது. சமீபத்தில் படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் குழந்தைகளின் ஸ்கூல் கட்டணம் கூட செலுத்த முடியாமல் அவதி பட்டு வருகிறார். அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஷால் உதவி செய்தார். அவர் நடித்து முடித்த படங்கள் பல பணப்பிரச்னையால் வெளிவராமல் உள்ளது என தெரிவித்தனர். நடிகை ஷர்மிளாவிடம் இதுகுறித்து கேட்டபோது, நான் மருத்துவ மனைக்கு சென்றது உண்மைதான், பணம் இல்லாதவர்களுக்குத்தானே அரசு மருத்துவமனைகள் உள்ளது என கூறியுள்ளார்.