ஹாலிவுட் நடிகை சல்மா ஹய்க் போல் இருக்கும் நம்ம பிக் பாஸ்-3 அபிராமி !!
ஹாலிவுட் படத்தில் 80, 90-ல் பிரபலமான நடிகை சல்மா ஹய்க் அன்றைய காலத்து கனவு கன்னி. பிக் பாஸ் -3 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த அபிராமி வெங்கடாச்சலம் பல ரசிகர்களை கவர்ந்தார். 28 வயதாகும் இவர் மாடலிங் துறையில் மிஸ் சவுத் போன்ற பட்டங்களை வென்றுள்ளார் அபிராமி. சமீபத்தில் நடந்த போட்டோ ஷூட்டில் கொஞ்சம் கவர்ச்சிகரமான போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படம் மற்றும் போஸ்களை பார்க்கும்போது 80, 90-களில் பிரபலமான ஹாலிவுட் நடிகை சல்மா ஹய்க் போல் தோற்றத்தில் இருந்தார். சல்மா ஹய்க் டெஸ்பரடோ, பிரிடா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிராமியின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பாராட்டுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மாடலிங், நடிப்பு, பரதநாட்டியம் என மூன்றிலும் அபிராமி வெங்கடாச்சலம் கலக்கி வருகிறார்.