பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராட்டம்!

November 25, 2019 at 8:14 pm
pc

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு போவதை எதிர்த்து அந்நிருவனத்தின் ஊழியர்கள் வருகின்ற நவம்பர் 28 ஆம் தேதி அன்று வேலை நிறுத்ததில் ஈடுப்டுள்ளன.

இந்தியாவில் கொச்சி மற்றும் மும்பையில் போன்ற இடங்களில் பாரத் பெட்ரோலியம் தலைமை அலுவலகம் உள்ளது. பாரத் பெட்ரோலியத்தை முன்னாள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அரசு நிறுவனமாக மாற்றினார். இந்நிருவனத்தில் சுமார் 12,500-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு விற்க போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசின் செயலை கண்டித்து நிறுவனத்தின் தொழிலாளர்கள் வருகின்ற 28 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய போவதாக தெரிவித்தனர். வேலை நிருத்தம் ஒருநாள் மட்டுமே நடைபெறும் என தகவல் வெளியானது. இருப்பினும் அரசு தொழிற்லாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டால் தொடர்ந்து போராட்டுவோம் என தெரிவித்தார் கொச்சி பாரத் பெட்ரோலியதின் ஜெனெரல் செக்கரட்ரி பிரவீன் குமார் பி.

வேலை நிறுத்த நாளன்று தாம் அனைவரும் கருப்பு பேட்ட்ஜ் அணிந்தும் அந்நிறுவனம் வழங்கும் மதிய மற்றும் இரவு உணவை மறுத்தும் ஒருநாள் வேலை நிருத்ததில் ஈடுபடப்போவதாக திரு.பிரவீன் குமார் பி தெரிவித்தார். மேலும் வேலை நிறுத்த காரணத்தினால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் உற்பத்தியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என பாரத் பெட்ரோலிய அசோசியேஷன் தலைவர் அணில் மீதே கூறினார்.

தற்போது உயர் நீதி மன்றம் இந்த போராட்டத்திற்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே உயர் நீதி மன்றம் பாரத் பெட்ரோலியம் அலுவகங்களுக்கு வருகின்ற 28, 29 ஆகிய இறுதினங்களுக்கு பாதுகாப்பை வழங்க டி.ஜி.பிக்கு உத்தரவு பிறப்பித்தது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website