“மாஸ்டர்”, தளபதி விஜய்க்கு செய்தி அனுப்பிய ஹாலிவுட் பிரபலம்.. என்ன சொன்னார் தெரியுமா !!
மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். இதை படம்பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். விஜய்யின் தீவிர ரசிகரான பில் டுக் (Bill Duke) தளபதி விஜய்க்கு வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார். அதனில் அவர், “இந்த பூமியை பாதுகாத்து மரக்கன்று நட்டதற்காக வாழ்த்துக்கள் என தெரிவித்தார். Bill Duke மிக பெரிய ஹாலிவுட் படமான ‘Predator’ ‘X-Men Last Stand’ போன்ற படங்களில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“குட்டி ஸ்டோரி” பாடல் யூடியூபில் 27 மில்லியன்னை கடந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தது. படத்தின் இயக்குனர் தனது படகுழுவொடு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார். மேலும் தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என ட்விட்டரில் கூறியிருந்தார் இயக்குனர் லோகேஷ்.
ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அடுத்து டப்பிங் உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றது.
தற்போது இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் என்பதை உறுதி படுத்தியுள்ளார். பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் எனவும் தெரிவித்தார்.