79 ஆயிரம் BSNL ஊழியர்கள் சுய விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் !!

BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 78,569 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் அளித்துள்ளது .
அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான BSNL நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது இந்த நிறுவனங்களின் ஊழியர்களின் ஊதியத்திற்கே ரூ.14,492 கோடி செலவழித்து வருகிறது. எனவே அந்த நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்ட விண்ணப்பிக்க கால அவகாசம் அளித்த கேடு கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதம் மூலம் சுமார் 78,569 ஊழியர்கள் தற்போது விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வளவு ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தால், இந்த நிதியாண்டில் ஊதியம் மற்றும் இதர படிகள் என மொத்தம் 1,300 கோடி ரூபாயை சேமிக்க முடியும் என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.கே. புர்வார் கூறியுள்ளார்.
மேலும் சுய விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 31ம் தேதி பணியில் இருந்து விடுகிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மற்றொரு அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிகாம் நிகாம் நிறுவனத்துடன் இணைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும் பி.கே.புர்வார் தெரிவித்தார்.
