அமெரிக்க நாளிதழில் வலம் வரும் இந்திய குடியுரிமை போராட்டம்: அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பு !!

அமெரிக்க நாளிதழின் தலைப்பு செய்தியில் இடம்பிடித்த, இந்திய குடியுரிமை சட்டத்திருத்த போராட்டங்களின் செய்திகள். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுமா ? ஷாக் நியூஸ்.
இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் வெடித்துவருகின்றன. வடஇந்தியாவில் தொடங்கி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இஸ்லாமியர்கள் எதிர்கட்சியினர் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கேரளா போன்ற இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் மேலும் போராட்டம் முற்றியுள்ளது.
இந்நிலையில், ஒருகேட்டுக்கு அந்த பக்கம் திரளான முஸ்லீம் மக்களும் மறுபக்கம் போலீசாரும் நிற்க கூடிய ஒரு புகைப்படத்தை செய்தி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த போட்டோ தற்போது அமெரிக்க முன்னணி நாளிதழ்களான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றில் முதல் பக்கத்தை பிடித்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது. அதிலும் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில், தலைப்பு செய்தியாக, “இந்தியாவை இந்து நாடாக மாற்றும் மோடியின் முயற்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் ” என குறிப்பிட்டுள்ளது. மேலும் நியூயார்க் டைம்ஸ் தனது மற்றொரு செய்தியில், “உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தான், அதிகமான அளவுக்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது ” அதுமட்டுமல்லாது “இந்த வாரத்தில் மட்டும் 60 மில்லியன் மக்கள், அதாவது பிரான்ஸ் நாட்டின் அளவுக்கான மக்களின் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் பதற்றம் நிலவி வருவது போன்ற இந்த செய்திகளால், முதலீட்டார்களுக்கு அச்சத்தை உருவாக்க்கும் , அதனால் அன்னிய முதலீடுகள் வருகை குறைந்து விடும் என்ற மற்றொரு அச்சத்தையும் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர் .ஏற்க்கனவே அதலபாதாளத்தில் உள்ள நம் நாட்டின் பொருளாதாரம் இதுபோன்ற போராட்டங்களால் மேலும் பாதிக்கக்கூடும் என பீதி கிளம்பியுள்ளது.
