தமிழ் சினிமாவில் அதிக சொத்து வைத்துள்ள ஜோடி யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒன்றாக படங்களில் நடித்து பின் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு தற்போது வரை மகிழ்ச்சியாக வலம் வரும் ஜோடிகள் பலர் உள்ளனர். குறிப்பாக, சூர்யா-ஜோதிகா, நயன்தாரா – விக்னேஷ் சிவன், அஜித் – ஷாலினி ஜோடிகளை கூறலாம். இதில், மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த ஜோடி என்றால் அது சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி தான்.
இவர்கள் இருவரும் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்தில் முதன் முதலாக ஜோடியாக நடித்தனர். பின், மீண்டும் ‘காக்க காக்க’ படத்தில் ஜோடியாக நடித்த போது நெருக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இருப்பினும், வீட்டில் அனுமதி கிடைக்காமல் பெரும் காத்திருப்புக்கு பிறகு கடந்த 2006 – ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இன்றும் ரசிகர்களுக்கு பெரும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஜோடி கோலிவுட்டில் பணக்கார ஜோடியாகவும் வலம் வருகின்றனர்.
இவர்களின் சொத்து மதிப்பு ரூ. 537 கோடி. இதில், சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ. 206 கோடி என்றும் ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 331 கோடி என்றும் சொல்லப்படுகிறது.