சினிமா

பட்டாசு வெடிப்பது பற்றி சர்ச்சையாக பேசிய ரகுல் ப்ரீத்!

Quick Share

நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர். ரகுல் ப்ரீத் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்ட போது, அந்த நிகழ்ச்சியில் ஒரு சின்ன பட்டாசு கூட வெடிக்க கூடாது என கண்டிஷன் போட்டிருந்தார். அவர் ஏன் பட்டாசு வெடிக்கமாட்டேன் என சொல்கிறார் தெரியுமா?

சில வருடங்களுக்கு முன்பு ரகுல் அளித்த ஒரு பேட்டியில் “என் அப்பா ஒரு தீபாவளி பண்டிகைக்கு என் கையில் 500 ரூபாய் நோட்டை கொடுத்து அதை தீயிட்டு கொளுத்த சொன்னார். நான் அதிர்ச்சி ஆகி, ஏன் என கேட்டேன்.”

“இதை தான் நீ செய்கிறாய். பணம் கொடுத்து பட்டாசு வாங்கி அதை கொளுத்துகிறாய். அந்த பணத்தில் சாக்லேட் வாங்கி யாருக்காவது கொடுக்கலாம் என கூறினார். அப்போது இருந்து நான் பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டேன்” என ராகுல் ப்ரீத் கூறி இருக்கிறார்.

பட்டாசு வெடிப்பதை பற்றி ரகுல் ப்ரீத் இப்படி பேசி இருப்பதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 

“500 ரூபாய் நோட்டை எரிக்கச்சொல்லி, எங்க அப்பா, படம் பார்க்க தியேட்டர் போக வேண்டாம் என கூறி இருக்கிறார். அப்படி செய்தால் உங்க தொழில் என்ன ஆகும்” என கமெண்ட் செய்து அவரை விளாசி வருகின்றனர்.

முதல் நாளே வசூலை குவித்த அமரன்!

Quick Share

சிவகார்த்திகேயனின் அமரன் படம் திரைக்கு வந்திருக்கிறது. உண்மை கதை, ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷனில் செயல்பட்டது, அதில் வீரமரணம் அடைந்தது என அவரை திரையில் கொண்டு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வந்த நிலையில் ரசிகர்களிடம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

அமரன் முதல் நாளில் சென்னையில் பெற்ற வசூல் விவரம் வந்திருக்கிறது.

முதல் நாளில் சென்னையில் மட்டும் 1.5 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம் அமரன். அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரண்டில் நடந்த திருட்டு..80 லட்சம் மதிப்புள்ள BMW கார் திருட்ட...

Quick Share

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட வந்த தொழிலதிபரின் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் தொலைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, விஜய் நடித்த குஷி மற்றும் பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ஒரு ரெஸ்டாரண்ட் மும்பையில் உள்ள தாதர் கோஹினூர் ஸ்கொயர் கட்டிடத்தின் 48வது மாடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரபல தொழிலதிபர்களும் பணக்காரர்களும் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரண்ட்டுக்கு தனது BMW காரில் வந்தார். அவர் காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு பார்க்கிங் பொறுப்பாளரிடம் சாவியை கொடுத்துவிட்டு சாப்பிட சென்றார். திரும்பி வந்தபோது, அவர் கார் காணவில்லை.

அதிகாலை 2 மணியளவில் கார் திருடப்பட்டது என கண்காணிப்பு சிசிடிவி கேமராவில் இருந்து தெரிய வந்துள்ளது. இது குறித்து சிவாஜி பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட காரின் மதிப்பு 80 லட்சம் என்றும், கார் திருட்டுக்கு பார்க்கிங் பொறுப்பாளருக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏன் பெண் இசையமைப்பாளர்கள் இல்லை? – இளையராஜாவின் அதிரடி பதில்!

Quick Share

இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் இசைஞானி இளையராஜா. இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 – ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இசையமைத்த முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இளையராஜா எவ்வளவு பெரிய புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு பல சர்ச்சைகளையும் சந்தித்தவர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ரசிகை ஒருவர் ‘ஏன் தமிழ் சினிமாவில் அதிக பெண் இசையமைப்பாளர்கள் இல்லை’ என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா சற்றும் யோசிக்காமல், “நீ வாயேன், வந்துடு வந்துடு.. யோசிக்கவே வேண்டாம், ஆல் த பெஸ்ட்” எனக் கூறினார். தற்போது இவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் வசூலை வாரி குவிக்கும் கங்குவா!

Quick Share

நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமான உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். விஸ்வாசம் படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். வரலாற்று கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சிவா.

தெலுங்கு ஒரு பாகுபலி, கன்னடத்தில் ஒரு கேஜிஎப் போல் தமிழ் சினிமாவிற்கு இந்த கங்குவா அமையும் என படக்குழுவினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு மாபெரும் வசூல் சாதனையையும் கங்குவா படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கங்குவா படத்தின் USA ப்ரீ சேல்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை USA ரூ. 8.5 லட்சம் வரை கங்குவா படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரிலீஸுக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில் USA-வில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்கின்றனர்.

விக்ரமின் ‘வீரதீர சூரன்’ பிசினஸ் ஸ்டார்ட்ஸ்.. தமிழக ரிலீஸ் உரிமை யாருக்கு த...

Quick Share

விக்ரம் நடிக்கும் “வீர தீர சூரன்” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் பிஸினஸ் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “வீர தீர சூரன்” படத்தில் துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகி வருகிறது என்றும், முதலில் இரண்டாம் பாகம், அதன் பின்னர் முதல் பாகம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் பிசினஸ் தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக தமிழக ரிலீஸ் உரிமையை 5 ஸ்டார் செந்தில் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே “டி.டி. ரிட்டன்ஸ்”, “பார்க்கிங்”, “கருடன்”, “மகாராஜா” உள்ளிட்ட படங்களை வெளியிட்டுள்ளார் என்பதுடன், தீபாவளிக்கு வரவிருக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்தையும் வெளியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “சேதுபதி”, “சிந்துபாத்” உள்ளிட்ட படங்களையும், கடந்த ஆண்டு வெளியான “சித்தா” படத்தையும் இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த “வீரதீர சூரன்” படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்த இந்த படத்தை பிரசன்னா ஜிகே எடிட்டிங் செய்ய, எச்ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

7 முறை தற்கொலைக்கு முயன்றேன்.. செல்வராகவன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Quick Share

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவ கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ஏழு முறை தற்கொலை முயற்சி செய்ததாக கூறியிருப்பது சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியதாவது:

“உலகம் முழுவதும் பார்த்தாலும் வாழ்க்கையில் இந்த இரண்டையும் அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது; ஒன்று தற்கொலை முயற்சி, இன்னொன்று டிப்ரஷன். நான் ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன், ஆனால் இப்பொழுது அல்ல, சில வருடங்களுக்கு முன்பு. ஒவ்வொரு முறையும், தற்கொலைக்கு முயலும் போது, உள்ளே ஒரு குரல் கேட்கும். ‘ஏதோ சொல்ற மாதிரி, ஏதோ கேக்குற மாதிரி இருப்பதை உணர்வேன். கடவுள் ஏதோ சொல்கிறார் என நினைத்து விட்டுவிடுவேன்.

அதன் பிறகு, 10 நாள் கழித்து, அல்லது ஆறு மாதம், ஒரு வருடம் கழித்து கூட வாழ்க்கை திடீரென மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் மாறும். அப்போது, தற்கொலை செய்து கொண்டிருந்தால் எல்லாமே போயிருக்குமே என்று நான் நினைப்பேன்.

வாழ்க்கையே அதுதான். தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்றால், அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் எனும் நம்பிக்கையே. சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு குடியிருப்பில் சந்தோஷமாக பிறந்து வாழ வேண்டும் என்று நினைப்போம்; ஆனால், கூவத்தில் பிறந்த பன்னியாகவோ, காட்டில் மரத்தில் தொங்கும் பேயாகவும் இருந்தால் யார் என்ன செய்வது?

நமக்கு கேட்கும் அந்த குரல் கடவுளின் குரலாகவோ அல்லது வேறு யாரின் குரலாகவோ இருக்கலாம். என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஆனால் அந்த குரல் கேட்காமல் இருக்காது. இது உண்மையானது என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்லும் 5 போட்டியாளர்கள்.. யார் யார் தெ...

Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், தீபாவளி தினத்தில் ஐந்து போட்டியாளர்கள் உள்ளே செல்வதாக கூறப்படுகிறது.

அவர்கள் ஏற்கனவே வெளியேறிய அர்னவ் முன்னாள் தலைவி திவ்யா, குக் வித் கோமாளி ஷாலின் ஜோயா, விஜய் டிவியின் டிஎஸ்கே, பாடகி ஸ்வாகதா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில், டி எஸ் கே தவிர மற்ற அனைவரும் பெண்களாக இருப்பதால் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்க இந்த வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உதவுவார்கள் என்றும், உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் உறுதியை சோதிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 5 போட்டியாளர்கள் சேர்ந்து மொத்தம் 20 போட்டியாளர்கள் இருப்பதால், நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குவது போல் இருக்கிறது என்று பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரூ.1700 கோடி சொத்துமதிப்பு.., இந்தியாவின் பணக்கார பாடகர்: யார் தெரியுமா?

Quick Share

இந்தியாவின் பணக்கார பாடகர் இயக்குனர் மணிரத்னம் மூலம் இசையமைப்பாளர் ஆன ஏ.ஆர்.ரகுமான் தான்.

தமிழ் சினிமாவின் 1992ம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

கோலிவுட்டில் தொடங்கிய ரகுமானின் இசைப்பயணம் பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், ஹாலிவுட் என 2000க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துள்ளார்.

முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான், இதுவரை 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார். 

மேலும், 30க்கும் மேற்பட்ட Filmfare Awards, 2 Oscar Awards, Grammy Award, BAFTA உட்பட உலகம் முழுவதும் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.

அதேபோல், வந்தே மாதரம் உள்ளிட்ட பல பிரபலமான ஆல்பங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.

ஒரு படத்திற்கு ரூ.8 முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.ரகுமான் மேடை நிகழ்ச்சிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

அதன்படி மாதம் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை வருமானம் ஈட்டும் ஏ.ஆர்.ரகுமான், ஆண்டுக்கு ரூ.50 முதல் ரூ.60 கோடி வரை சம்பாதிக்கிறார்.

மேலும், இவரிடம் Audi, BMW, Volvo, Benz உள்ளிட்ட சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.1700 கோடிக்கு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.   

கட்டதொரை மகனை நல்லா வளர்த்து இருக்காரு…ஷாரிக் ஹாசனுக்கு குவியும் பாராட்டு…

Quick Share

பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். தற்போது புதுமண தம்பதிகள் இருவரும் முதன்முறையாக பேட்டி அளித்துள்ளனர்.

சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக கலக்கி வருபவர் ரியாஸ் கான். இவர், நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானார். இதைத் தொடர்ந்து, பென்சில், டான் போன்ற படத்தில் நடித்துள்ளார்.

ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரிடம் சொல்லி இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆகஸ்ட் மாதம் அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. மரியா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்த நிலையில், இந்த திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு ஷாரிக்கும், மரியாவும் முதன் முறையாக RedNool யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், பேசி மரியா, நான் சிங்கிள் மதராகத்தான் கஷ்டப்பட்டு என் மகளை வளர்ந்து வந்தேன், இதனால், எனக்கு என் மகள் தான் முக்கியமாக தெரிந்தது. இதனால் இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. வருபவர் என்னை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால், என் மகளை ஏற்றுக்கொள்வார்களா என்கிற பயம் இருந்தது. ஆனால், என் மகளை ஷாரிக் ரொம்ப நன்றாக பார்த்துக்கொண்டார். அதைப்பார்த்துத்தான் எனக்கு இவர் மீது காதலே வந்தது. நல்ல கணவரை விட ஷாரிக் நல்ல அப்பாவா இருக்கிறார்.

எனக்கு எப்படி என் மகளை ஏத்துப்பங்க என்கிற பயம் இருந்தது ஆனால், அவங்க ஜாராவை அவங்களோட பேத்தியாகவே ஏற்றுக்கொண்டார்கள். எங்க ஷாப்பிங் போனாலும், அவளையும் கூட்டித்தான் போகிறார்கள். அங்கிள் ஷூட்டிங்கில் இருந்தாலும், ஜாரா ஸ்கூலுக்கு போய்ட்டால, வந்துட்டாளா என்று விசாரிக்கிறார். ஷாரிக் என்கிட்ட சொன்னார், இத்தனை வருஷமா நீ ஜாராவை கஷ்டப்பட்டு வளர்த்துட்டா இனிமேல் அவளை நான் பார்த்துக்கொள்கிறேன், அவள் என் மகள் என்றார். இப்போ தான் அந்த பயமே போச்சு என்று மரியா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

அப்போது பேசிய ஷாரிக், என் அப்பா, அம்மாவை பற்றித்தான் முதலில் யோசித்தேன். நான் மாரியா பற்றி விஷயத்தை சொன்னதும் யோசித்தார்கள், அதன் பிறகு வீட்டுக்கு வந்த மரியா, ஜாராவிடம் பேசினார்கள். ஜாராவை பார்த்ததும் அவர்களுக்கு பிடித்துவிட்டது. ஊர் ஆயிரம் விஷயத்தை சொல்லும், அதை பத்தி எனக்கு கவலை இல்லை. என் பொண்டாட்டி, என் மகள் அவ்வளவு தான் என்று ஷாரிக் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

யூடியூப் சேனல் தொடங்கிய இளையராஜா..’Ilaiyaraaja BGM’s Official’…

Quick Share

இளையராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம். இவரது இசையின் தாக்கம் இல்லாத இசைப்பாளர்கள் இன்றுவரை தமிழ் சினிமாவில் இல்லை. அந்த அளவிற்கு தனது இசையால் அனைவரையும் கட்டி ஆட்சி செய்தவர் என்றே கூறலாம். ரீமேக் படங்களுக்கு இசை அமைக்கும்போதும் கூட, இளையராஜாவின் இசைதான் ஒர்ஜினல் வெர்ஷன் படங்களைவிட பல மடங்கு சிறப்பாக இருக்கும். நடமாடும் இசைப் பல்கலைக்கழகமாகவே இளையராஜா திகழ்கின்றார் எனலாம். தற்போது அவர் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக உலக அளவில் அறியப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. 80களில் இருந்து இசையமைத்து வரும் இளையராஜா இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடர்ந்து இசை அமைத்தும் வருகின்றார். நேற்று முன்தினம் கூட அதாவது அக்டோபர் 25ஆம் தேதிகூட, இவரது இசையில் கிஃப்ட் என்ற படம் உருவாகின்றது என அறிவிப்பு வெளியானது. இசையில் தொழில்நுட்பங்கள் கலந்து இசையின் நிலையும் அதன் ரசிகர்களின் ரசனையும் வேறு தளத்திற்கு மாறிவிட்டது என பலர் கருத்து தெரிவித்தனர். மேலும் அதில் பலர், இளையராஜாவால் இனி கொடிகட்டிப் பறக்க முடியாது என கிண்டலடிக்கவும் செய்தனர், ஆனால் ராஜா எப்போதும் ராஜாதான் என இன்றும் நிரூபித்து வருகின்றார் இளையராஜா.

இசைமைப்பாளர் ஷேன் ரோல்டன் ஒருமுறை கூறும்போது, ‘இளையராஜாவுக்கு இருக்கும் கர்வம் என்னைப் பொறுத்தவரை சரியானதுதான் என்பேன். கலைஞனுக்கு பொதுவாகவே கர்வம் இருக்கும் என்பார்கள். ஆனால் இளையராஜா அவ்வளவுதான் இனி அவரால் ஹிட் கொடுக்க முடியாது, இசை அமைக்க முடியாது என பலர் கூறிவரும்போது, இன்றைக்கும் ஹிட் கொடுத்து உங்களை உருக வைக்கின்றார், தனது இசையால் அழ வைக்கின்றார் என்றால் அவர் ராஜாதான்’ எனக் கூறினார்.

புரட்சி: அதேபோல் இளையராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து இன்றைக்கு இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளராக உள்ளார். இவரது இசையை கொண்டாடாத, பாராட்டாத ஆட்களே இல்லை எனலாம். இவரை காலி செய்ய நினைத்தவர்களின் எண்ணங்களை காலி செய்தவர் இளையராஜா. இது தொடர்பாக இசை அமைப்பாளர் தென்மா பேசுகையில், “இளையராஜாவின் இசையில் நான் புரட்சியைத் தேடவில்லை. இளையராஜாவே ஒரு புரட்சிதான்” என கூறியிருந்தார்.

இளையராஜா தனது இசைக் கோர்ப்புகளை இப்போதுவரை மிகவும் பத்திரமாக வைத்து வருகின்றார். இந்நிலையில் அவர் தனது இசைக்கோர்ப்புகளையும் பாடல்களையும் பின்னணி இசையையும் வெளியிடும் வகையில், புதியதாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். மேலும் இந்த யூடியூப் சேனலை எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் தொடங்கியுள்ளார். இதில் தனது பின்னணி இசைகள் தொடங்கி, சிம்பொனி, இசைக்கச்சேரிகள் என பலவற்றை பதிவிடப்போகின்றார் என கூறப்படுகின்றது.

யூடியூப் சேனல்: இளையராஜா தற்போது தொடங்கியுள்ள யூடியூப் சேனலுக்கு ‘Ilaiyaraaja BGM’s Official’ எனப் பெயரிட்டுள்ளார். இதுமட்டும் இல்லாமல் இதில் முதல் வீடியோவாக புன்னகை மன்னன் படத்தின் பின்னணி இசையை அப்லோட் செய்துள்ளார். மேலும் இந்த பின்னணி இசைக்கு மாண்டேஜ் ஃபுட்டேஜாக இந்தியாவின் பல இடங்களுக்குச் சென்று எடுக்கப்பட்ட வீடியோக்களை இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை சுமார் 25 ஆயிரம் பேருக்கு அதிகமாக பார்த்துள்ளனர். மேலும் இதுவரை இந்தச் சேனலை இதுவரை 10 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இளையராஜா யூடியூப் சேனல் தொடங்கியது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள்களின் வேற லெவல் கிளாமர்… அக்கா, தங்கை நடிகைகளின் போஸ்..

Quick Share

அக்கா தங்கை நடிகைகளின் கிளாமர் போஸ் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படங்களை எடுத்த கேமராமேன் கொடுத்து வைத்தவர் என்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

தமிழ் திரை உலகில் கடந்த எண்பதுகளில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அதன் பின்னர், அவர் பாலிவுட் சென்று பத்து ஆண்டுகள் அங்கு நம்பர் ஒன் நடிகையாக இருந்தார். அதன் பின் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பதும், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய இரண்டு மகள்களும் தற்போது பாலிவுட் திரை உலகில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி, அதன் பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும், சமீபத்தில் வெளியான “தேவாரா பார்ட் 1” படத்தில் தெலுங்கு படத்திலும் அவர்தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், இன்னொரு மகளான குஷிகபூர் கடந்த ஆண்டு நாயகியாக அறிமுகமான நிலையில், தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் இருவருக்கும் மில்லியன் கணக்கில் பாலோவர்கள் இருவருக்கும் இருக்கும் நிலையில், சற்றுமுன் இருவரும் கிளாமர் காஸ்ட்யூம் அணிந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் பதிவு செய்து சில மணி நேரமே ஆகியுள்ள நிலையில் 11 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது




You cannot copy content of this Website