பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையனாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. TJ ஞானவேல் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடிக்க அவருடன் இணைந்து பல வருடங்கள் கழித்து அமிதாப் பச்சன் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முதல் முறையாக ரஜினி படத்தில் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படம் வெளிவந்து 17 நாட்களை கடந்துள்ள நிலையில், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வேட்டையன் படத்தின் பட்ஜெட் ரூ. 225 ஆகுமாம். இதில் ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் பிசினஸ் மூலம் ரூ. 223 கோடி வரை வேட்டையன் வசூல் செய்துள்ளது.
ரிலீஸுக்கு பின் இப்படம் உலகளவில் செய்த வசூலின் அடிப்படையில் ரூ. 90 கோடி வரை தயாரிப்பாளருக்கு நிகர லாபம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யின் முதல் அரசியல் பேச்சு எப்படி இருந்தது என்று தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. 2026 தேர்தலில் போட்டி, கூட்டணிக்கு வருபவர்கள் வரலாம் என விஜய் பேசியதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் விஜய் பேசியது பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக புகழின் உச்சத்தில் வலம் வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து 20 ஆண்டுகளாக சினிமாவில் டாப் நடிகையாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். தமிழ் சினிமா கடந்து இந்தியில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திலும் நடித்து பாலிவுட் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
தற்போது, யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என்ற படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படப்பிடிப்பின் போது அவர் சிறு வயது ரசிகர் ஒருவருடன் சைகையில் பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், “நயன்தாரா இரவு நேர படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தபோது ஒரு சிறுவன் நயன்தாராவின் பெயரை சத்தமாக கத்துகிறான். அதை கவனித்த அவர் சாப்பிட்டாயா, போய் தூங்கு” என்று கூறுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட ஷோக்களில் ஒன்று. கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடன் தொடங்கியது. புதியதாக களமிறங்கிய விஜய் சேதுபதியும் பெரிய அளவில் ஸ்கோர் செய்கிறார், விளையாட்டும் சூடு பிடித்துள்ளது.
ரவீந்தர், அர்னவ் இருவரும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து கடந்த வாரம் வீட்டில் இருந்து தர்ஷா குப்தா வெளியேறினார்.
தற்போது அடுத்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்துள்ளது. அதில் சுனிதா, ஜனனி, ஜாக்குலின், அர்ஷிதா, ரஞ்சித், அருண், சத்யா மற்றும் தீபக் ஆகியோர் வந்துள்ளனர்.
இந்த லிஸ்டில் இருந்து அடுத்த வாரம் வெளியேறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் ஷூட்டிங் செய்திருக்கிறது படக்குழு. மேலும் அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுவதால் ரசிகர்கள் அதற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று விடாமுயற்சி படத்தின் பூஜை தொடங்கி இருக்கிறது. அதற்கான பூஜை நடைபெற்று படக்குழுவினர் டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கின்றனர். ஆரவ் தான் டப்பிங் பேச தொடங்கி இருக்கிறார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளம்பெண்ணொருவர், தனது உறவினர் வீட்டில் 17 சவரன் தங்க நகைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராமில் பிரபலம்
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் கேரளவைச் சேர்ந்த முபீனா (26).
கொல்லம் மாவட்டம் பஜனமடம் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த செப்டம்பர் மாதம் தனது மைத்துனி முனீராவின் வீட்டில் 17 சவரன் தங்க நகைகளை திருடியுள்ளார்.
ஆனால், முனீராவுக்கு கடந்த 10ஆம் திகதி தான் நகைகள் திருடுபோனது தெரிய வந்துள்ளது. பின்னர் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, முபீனா வீட்டில் இருந்து திரும்பி வருவது தெரிய வந்துள்ளது. அத்துடன் அக்டோபர் 10ஆம் திகதி வரை வீட்டுக்கு யாரும் வராததும் தெரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து முபீனா மீது 12ஆம் திகதி பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முபீனாவின் தோழி ஒருவரும் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் முனீரா அளித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார், முபீனாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில் திரையுலகினர் அவரது கட்சி குறித்து பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் சமூக வலைதளங்களில் எந்தெந்த திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதே எப்போது பார்ப்போம்.
விஜய் சேதுபதி: “தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க, தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்”
சிவகார்த்திகேயன்: “இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்”
ஜெயம் ரவி: “சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் சிறப்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா “
வெங்கட் பிரபு: உங்கள் பார்வை பலருக்கு நேர்மறையான மாற்றத்தையும் வெளிச்சத்தையும் கொண்டு வரட்டும்”
அர்ஜுன் தாஸ்: “உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்”
வசந்த் ரவி: உங்கள் அற்புதமான தொடக்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். உங்கள் திரைப்படங்கள் மூலம் எங்களில் பலருக்கும் நீங்கள் உண்மையிலேயே உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். விரைவில் உங்கள் அரசியல் பயணத்திலும் நினைவுகூரப்படுவீர்கள், பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”
சிபி சத்யராஜ்: விஜய் அண்ணாவின் உரையை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றேன். இந்தப் புதிய பயணம் அவருக்கு பாஸிடிவ்வையும், வெற்றியையும் தரட்டும்”
சசிகுமார்: ” உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல் வாழ்த்துகள்… விஜய் சார்”
சதீஷ்: ” திரைத்துறையைப் போல் இதிலும் வெற்றிக் கொடி நாட்ட வாழ்த்துக்கள்”
ஆர்ஜே பாலாஜி: “அன்புள்ள விஜய் சார், சினிமாவை விட்டுவிட்டு தேர்தல் அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய முடிவு. உங்கள் மிகப்பெரிய பயணம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
சாக்ஷி அகர்வால்: விஜய் மாநாட்டிற்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். வரலாற்றைக் காண தயாராக இருக்கிறேன். இந்தப் பயணத்தை ஒன்றாகக் கொண்டாடுவோம்”
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்: “விஜய் அவர்களின் புதிய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்”
சாந்தனு: விஜய் அண்ணாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய நாள். உங்கள் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற எங்களது வாழ்த்துக்கள். உங்களது பேச்சைக் கேட்கவும், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையை அறியவும் ஆவலுடன் இருக்கிறேன்”
சூரி: விஜய் அண்ணே உங்கள் அரசியல் வாழ்க்கையின் புதிய துவக்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மக்கள் சேவையில் அடியெடுத்து வைத்துள்ள உங்கள் #தமிழகவெற்றிக்கழகம் கட்சிக்கு எனது நல்வாழ்த்துகள்.
மேலும் அர்ச்சனா கல்பாத்தி, நெல்சன், சசிகுமார், தமன், பாடலாசிரியர் விவேக், ரஞ்சித் ஜெயக்கொடி உள்ளிட்டோர்களும் விஜய்யின் அரசியல் கட்சி மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, போடா போடி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தாலும் அதற்கு முன்பே ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களை சில காரணங்களால் மிஸ் செய்துள்ளார். முதல் படமே அவருக்கு வெற்றிக்கொடுக்க அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் கடந்த மார்ச் மாதம் மும்பையை சேர்ந்து தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் திருமணம் தாய்லாந்தில் மிக நெருக்கமான குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது. அதற்கு முன் சென்னையில் மெஹந்தி, சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி என பிரமாண்டமாக இந்த திருமணம் நடந்தது.
இந்நிலையில், அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்று கொண்டிருக்கும் இந்த ஜோடி தற்போது மாஹே தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வரலட்சுமி சரத்குமார் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அதில் ஒரு வீடியோவை பதிவிட்டு “மனைவி ஒரு நல்ல போட்டோ போடுவதற்கு பின்னால் கணவன் 100 போட்டோக்களையாவது எடுக்க வேண்டும் அப்போது தான் ஒரு புகைப்படமாவது அழகாக இருக்கும் என ஜாலியாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் சினேகா. அழகான சிரிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயருக்கு சொந்தக்காரரானார். முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.
படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்த நிலையில் 2009ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்த சினேகா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான GOAT படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இந்நிலையில், பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்ற சினேகாவிடம் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, சற்றும் தயங்காமல் தல அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். என் அக்காவுக்கு தளபதி விஜய் மிகவும் பிடிக்கும் அவர் அறையில் விஜய் புகைப்படங்கள் அதிகம் இருக்கும் என கூறியுள்ளார்.
ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் யோகா மாஸ்டரை காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், தனது காதலரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில்,அவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் ரொமான்டிக் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எப்போதும் லைம் லைட்டில் இருந்து கொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் தான் நடிகைகள் அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். சிலர் இணையத்தில் பரபரப்புக்காக எதையாவது பேசி அதை சர்ச்சையாக்கி அதன் மூலம் பிரபலமாவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இப்படி சில நடிகைகள் இருந்தாலும் அவர்களுக்கு எதிர்பார்த்த படவாய்ப்பு வருவதில்லை.இப்படி எந்தவிதமான சர்ச்சையும் வேண்டாப்பா சாமி, நடிக்க பட வாய்ப்பு வந்தா வருது இல்லை என்றால், இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று சினிமாவை ஒப்புக்கு வைத்துக்கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வரும் நடிகைகளில் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.
நடிகை ரம்யா பாண்டியன்: அப்படி போட்டோஷூட் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால், இவர் மற்ற நடிகைகளைப்போல போட்டோஷுட்டுக்காக பணத்தை செலவு செய்யாமல், மொட்டைமாடியில், தனது வளைந்து நெளிந்து இருக்கும் தனது இடையழகை காட்டி போட்டோ எடுத்து ஒரே போட்டோஷூட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். இணைதயத்தில் ஏராளமான பாலோர்களை வைத்து இருக்கும் இவர், தனது ரசிகர்களுக்காகவே விதமான போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அழகின் ரகசியம்: பிரபலமான கையோடு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு பெயரை பெற்றுத்தராததால், போட்டோஷுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாக ரம்யா பாண்டியன் அவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவரின் திருமணம் ரிஷிகேஷில் அடுத்த மாதம் 15ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலனுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ப ரம்யாபாண்டியன் செல்லத்திற்கு கல்யாணமா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் அமரன் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்திகேயன் இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார். அங்கு அனைவர்க்கும் ட்ரைலர் போட்டு காட்டப்பட்டது. பிக் பாஸ் இயக்குனராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் பிக் பாஸில் கமல் சார் தான் இந்த படத்தை அறிவித்தார். அதனால் அமரன் படத்திற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் அதிகம் தொடர்பு இருக்கிறது என சிவகார்த்திகேயன் கூறினார்.
ஆர்மியில் இருப்பவர் எப்படி தாடி வைத்திருப்பார் என சிவகார்த்திகேயன் லுக் பற்றி பலரும் விமர்சனம் செய்தார்கள். அதற்கு பிக் பாஸில் சிவகார்த்திகேயன் பதில் கொடுத்து இருக்கிறார்.
“அது 44 ராஷ்ட்ரியா ரைபிள்ஸ் என்று ஒரு ஸ்பெஷல் டீம். அவர்களுக்கு தாடி பற்றிய கட்டுப்பாடுகள் இல்லை. அவரகள் மக்களோடு மக்களாகவும் சில நேரம் இருப்பார்கள். அதனால் தான் அப்படி” என சிவகார்த்திகேயன் கூறினார்.
பிக் பாஸ் 3ல் போட்டியாளராக களமிறங்கியவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகையான இவருக்கு பிக் பாஸ் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. சமீபத்தில் பிக் பாஸ் 8 பிரமாண்டமாக துவங்கியது. அதுவும் மக்கள் செல்வன் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் 8 ஆரம்பமானது. ஆனால் இதிலிருந்து ரவீந்தர் மற்றும் அர்னவ் என இரு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
பிக் பாஸ் 8ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் 8 Fun Unlimited எனும் ஷோ நடந்து வருகிறது. சீரியல் நடிகரும் தொகுப்பாளருமான சபரி இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்க, கடந்த வாரம் இதில் ரவீந்தர் கலந்துகொண்டனர்.
அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அர்னவ் இந்த வாரம் பிக் பாஸ் 8 Fun Unlimited நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இதில் பிக் பாஸ் 3ல் எப்படி அனைத்து போட்டியாளர்களையும் வனிதா வெளுத்து வாங்கினாரோ, அதே போல் பிக் பாஸ் 8 Fun Unlimited நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்னவ் இடம் தனது கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி அர்னவை பார்த்து வெஸ்ட்-யா என்று, நாங்க எதிர்பார்த்ததை நீ செய்யவில்லை, வெளியே வந்தபின் மேடையில் பேசுகிறார், வீட்டிற்குள் என்ன பண்ண, பாலாறுன்னு ஒன்னு வுட்ருப்பேன், என வனிதா பேசியுள்ளார்.