சினிமா

அதிகரித்த திரையரங்க எண்ணிக்கை: வசூலை வாரி குவிக்கும் பிளாக்!

Quick Share

கடந்த 11ஆம் தேதி ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பிளாக். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் பாலசுப்ரமணியன் இயக்கியிருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வேட்டையன் வெளிவந்த அதே வாரத்தில் பிளாக் திரைப்படம் வெளிவந்த நிலையிலும் வெற்றியடைந்துள்ளது. மேலும் பிளாக் படத்திற்கு திரையரங்க எண்ணிக்கைகளும் கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 15 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள பிளாக் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் உலகளவில் ரூ. 9.9 கோடி வசூல் செய்துள்ளது.

தளபதி 70 படம் இருக்கா?

Quick Share

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் விஜய். அண்மையில் இவர் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் வரவேற்பு பெற்றது. தற்போது, விஜய்யின் அரசியல் கட்சியின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளாராம். தற்போது, விஜய் அவரது கடைசி படமான 69 – வது படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார்.

தற்போது, தளபதி 69 படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு அடுத்து விஜய் அவருடைய 70 – வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது, இந்தியில் மெகா ஹிட் படமான ஜவான் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் அட்லீயோடு இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அட்லீ இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

அந்த படத்தில் தான் கேமியோ கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் உடன் அடுத்த படத்தை உறுதி செய்த இயக்குனர் நெல்சன்!

Quick Share

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாகவும் மாறியது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜெயிலர் 2 படத்தை இயக்க இயக்குனர் நெல்சன் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் ஜெயிலர் 2 குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நெல்சன் திலீப்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியுடன் தனது அடுத்த படத்தை குறித்து பேசியுள்ளார்.

இதில் கூலி படத்தை முடித்தவுடன் ரஜினி சாறுடன் படம் பண்ணுவதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார். ஆனால், அது ஜெயிலர் 2 என அவர் குறிப்பிடவில்லை.

ஏற்கனவே வெளிவந்த ஜெயிலர் 2 குறித்த தகவல்கள், தற்போது நெல்சன் கூறியுள்ளதை எல்லாம் வைத்து இது ஜெயிலர் 2 தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எப்போது அறிவிப்பு வெளியாகிறது என்று.

2000 கோடி வசூலித்த படம்: “எனக்கு வெறும் 1 கோடி தான் கொடுத்தாங்க” – பப...

Quick Share

அமீர் கான் நடித்த தங்கல் (Dangal) படம் 2016ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆகி வசூலை குவித்தது அந்த படம். ஒருவர் தனது இரண்டு மகள்களுக்கும் சின்ன வயதில் இருந்து எப்படி மல்யுத்தத்தில் பயிற்சி கொடுத்து ஜெயிக்க வைக்கிறார் என்பது தான் கதை. அந்த பெண்கள் படும் கஷ்டங்கள் திரையில் பார்த்து ரசிகர்களும் உருகினார்கள்.

மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் குடும்பத்தின் உண்மையான கதை தான் இந்த படம்.

படம் ரிலீஸ் ஆகி 8 வருடங்கள் கழித்து தற்போது பபிதா போகட் அளித்திருக்கும் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

“Dangal படம் 2000 கோடி வசூல் செய்தது. ஆனால் என் குடும்பத்திற்கு வெறும் 1 கோடி தான் கிடைத்தது” என அவர் கூறி இருக்கிறார்.

அவரை நெட்டிசன்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.

“1 கோடி ரூபாய் சின்ன தொகை இல்லை.”

“யாரென்றே தெரியாமல் இருந்த உங்களை நாடு முழுவதும் பிரபலம் ஆக்கியது அந்த படம் தான்.”

“ஆரம்பத்தில் ஒப்பந்தம் போட்டுவிட்டு இப்போது ஏன் பணத்திற்காக பேசுறீங்க” என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் 8வது சீசன் வீட்டிற்கு வரப்போகும் பிரபல நடிகர்!

Quick Share

பிக்பாஸ் 8, ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற டாக் லைனுடன் கெத்தாக என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. கமல்ஹாசன் இருந்த இடத்தில் இவர் எப்படி இருக்கப்போகிறார், நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்ற பெரிய கேள்வி மக்களிடம் இருக்க மாஸ் காட்டி விட்டார் விஜய் சேதுபதி.

இதுவரை வீட்டில் இருந்து ரவீந்தர் மற்றும் அர்னவ் வெளியேறி இருக்கிறார்கள். இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேறப்போகிறார்கள் என்று தான் மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

கலவரமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 8வது சீசன் வீட்டில் மாஸாக பட புரொமோஷனுக்காக என்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரபல நடிகர், இவரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தான்.

பிரபல நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான கவின் தான் புதியதாக நடித்துள்ள ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திற்காக பிக்பாஸ் 8 வீட்டிற்குள் நுழைய இருக்கிறாராம். ரசிகர்களும் கவின் என்ட்ரிக்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புஷ்பா 3: எதிர்பாராத விஷயத்தை கூறிய தயாரிப்பாளர்!

Quick Share

கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்து இந்திய சினிமாவை புரட்டிப்போட்ட திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுடன் இணைந்து பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் நடிகை சமந்தா ஆடிய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்காக லீட் இருந்தது. இந்த ஆண்டு இடையிலேயே புஷ்பா 2 வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரிலீஸ் ஆகவில்லை. இறுதியாக வருகிற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி புஷ்பா இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாம் பாகமே இன்னும் வெளிவராத நிலையில், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தகவலை தயாரிப்பாளர் கொடுத்துள்ளார்.

அதன்படி, புஷ்பா 2 படத்தின் இறுதியில் புஷ்பா 3 படத்திற்காக லீட் இருக்கிறது. அதனால் புஷ்பா 3 படம் கண்டிப்பாக வரும் என கூறியுள்ளார். இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இர்பான் போல நடிகர் அஜித் மனைவி ஷாலினி பிரசவத்தின்போது செய்த விஷயம்: மருத்துவர் கேள்வி!

Quick Share

குக் வித் கோமாளி பிரபலம் இர்ஃபான் தனது மனைவி பிரசவத்தின் போது ஆபரேஷன் தியேட்டரில் எடுத்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டி இருந்தது சர்ச்சை ஆனது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறி இருந்தார். தற்போது அந்த மருத்துவமனை செயல்பட 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இர்பான் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அஜித் செய்தபோது வந்த பாராட்டு..

இந்த விவகாரம் பற்றி மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி என்பவர் வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினி பிரசவத்தின்போது ஆபரேஷன் தியேட்டர் உள்ளே இருந்து இருக்கிறார். அவரிடம் இருந்த சின்ன ஹேன்டி கேமராவில் வீடியோ எடுத்திருக்கிறார்.

பெண்கள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்தால் தான் புரியும் என அஜித் அதை செய்ததாக அப்போது அவரை எல்லோரும் பாராட்டினார்கள்.

இருப்பினும் இர்பான் கொஞ்சம் எல்லைமீறி போய் உள்ளே சென்று குழந்தை தொப்புள் கொடியை வெட்டி இருக்கிறார். அது மிகப்பெரிய தவறு என மருத்துவர் கூறி இருக்கிறார்.

அமலா ஷாஜி எங்கே போயிருக்காரு தெரியுமா?.. வாட்டர் பேபி தான்!

Quick Share

நடிகை அமலா பால் பாலி தீவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி தாய்லாந்தில் தாறுமாறாக ஹாலிடேவை கொண்டாடி வருகிறார். 

இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி சீக்கிரமே சினிமாவில் இளம் நடிகையாக போராடி வரும் நிலையில், தற்போது தனது தீபாவளி விடுமுறையை இப்பவே தாய்லாந்தில் ஜாலியாக கொண்டாடி வருகிறார்.

நடிகைகள் போலவே அவர்கள் நடனமாடும் பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோ போட்டு இளைஞர்கள் மத்தியில் டிரெண்டான இவருக்கு 4.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

தாய்லாந்து தீவில் குட்டி கவுனை அணிந்துக் கொண்டு குளியல் போட்ட அமலா ஷாஜியை பார்த்த ரசிகர்கள் பிகினி போட்டோ போடுங்க அக்கா என ரசிகர்கள் ஏக்கத்துடன் கேட்டு வருகின்றனர்.

தாய்லாந்து தீவில் குட்டி கவுனை அணிந்துக் கொண்டு குளியல் போட்ட அமலா ஷாஜியை பார்த்த ரசிகர்கள் பிகினி போட்டோ போடுங்க அக்கா என ரசிகர்கள் ஏக்கத்துடன் கேட்டு வருகின்றனர்.

சோஷியல் மீடியாவில் சோப்பு, சீப்பு, கண்ணாடி விற்பது போல எதையாவது விளம்பரப்படுத்தியே லட்சக் கணக்கில் மாதந்தோறும் சம்பாதித்து வரும் அமலா ஷாஜி இப்படி ஜாலியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார் என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

நடிகை அமலா பால் பாலி தீவில் குடும்பத்துடன் டூர் அடித்து வரும் நிலையில், அமலா ஷாஜி தாய்லாந்தில் உள்ள தீவில் தனது நண்பர்களுடன் ஜாலி டூர் அடித்து வருகிறார்.

என்னுடன் தங்கினால் 7000 டாலர் தருகிறேன்.. நடிகைக்கு மெசேஜ் அனுப்பிய 100 வயது நபர்.!

Quick Share

100 வயது நபர் ஒருவர் பிரபல நடிகையிடம் ’என்னுடன் தங்கினால் 7000 முதல் 8000 டாலர் தருகிறேன்’ என்று மெசேஜ் அனுப்பியதாக அந்த நடிகை சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சிகளில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை சீமா சஜ்தே என்பவர் சமீபத்தில் நடந்த வெப் தொடர் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, 100 வயது நபர் தனக்கு மெசேஜ் அனுப்பியதாகவும், அந்த மெசேஜில் தன்னுடன் தங்கினால் மாதம் 7000 முதல் 8000 டாலர் வரை தருவதாக கூறியதாகவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெசேஜ் அனுப்பிய நபர் யார் என தெரியவில்லை என்றும், என்னை தன்னுடன் வைத்திருக்க விரும்புவதாகவும், அதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு பெரும் தொகையை கொடுப்பதாக அந்த நபர் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறினார். “அவரை பார்க்க 100 வயது ஆள் போல் இருந்தார், எனக்கு ரொம்ப விசித்திரமாக இருந்தது. ‘உங்களுடன் நான் தங்கினால் மகிழ்ச்சியாக இருப்பேன். அதற்காக மாதம் 7000 முதல் 8000 டாலர் பட்ஜெட்டாக தருகிறேன்’ என்று கூறிய அவரைப் பார்த்ததும் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது,” என்று கூறினார் நடிகை சீமா சஜ்தே.

நெட்பிளிக்ஸ் ரியாலிட்டி ஷோ “Fabulous Lives of Bollywood Wives” என்ற வெப்தொடரின் மூன்றாவது சீசனில் சீமா சஜ்தே நடித்து இருந்த நிலையில் இந்த தொடரின் புரமோஷனில் பிசியாக உள்ளார். சீமா தனது கணவர் சொகைல் கான் என்பவரை பிரிந்து விட்ட நிலையில், தற்போது அடுத்த திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்பதும், தொழில் அதிபர் விக்ரம் என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர்..

Quick Share

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறி உள்ள நிலையில், அவர் தற்போது சில பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் பட்ஜெட் மட்டும் 2000 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று “ராஜா சாப்”. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரபாஸ் ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருக்கும் இந்த படத்தில், நிதி அகர்வால், ரித்திக் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மாருதி இயக்கத்தில், தமன் இசையில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது. இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும்போது, இந்த படம் ஒரு செம திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று மோஷன் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது ‘லப்பர் பந்து’.. தேதியை அறிவித்த ஹாட்ஸ்ட...

Quick Share

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’லப்பர் பந்து’ என்ற திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சீன் ரோல்டன் இசையில் உருவான இந்த படம், ஏற்கனவே ஓடிடியில் வெளியாகும் என தேதி அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், தற்போது ஹாட்ஸ்டார் தனது சமூக வலைதள பக்கத்தில் ’லப்பர் பந்து’ திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் தீபாவளி அன்று இந்த படத்தை பார்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.திரையரங்கில் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற ’லப்பர் பந்து’ ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்குள் ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சோபிதா..!

Quick Share

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, பிரபல நடிகை சோபிதாவை திருமணம் செய்ய இருப்பதாகவும், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டாலும், இன்னும் திருமண தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் சோபிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரீ-வெட்டிங் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

‘Pasupu Danchadam’ என்ற நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாக கூறியுள்ள சோபிதா, இது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை அடுத்து “எப்போது திருமணம்?” என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த புகைப்படங்கள் பதிவு செய்து சில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் நடிகை த்ரிஷா உள்பட 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website