சினிமா

கொரோனாவின் புதிய அவதாரம்…விளங்குகளுக்கு கொரோனா தொற்று – எச்சரிக்கை விடும் ...

Quick Share

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட பல்வேறு
நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் இந்திய உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே செல்வதால் மக்கள் பலரும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதற்காக ஒவ்வ்வொரு தனி நபரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்து வருகின்றது.இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஸ்ரீதிவ்யா “கோவிட்19 புதிய அவதாரம் எடுக்கிறது! எல்லோரும் தயவுசெய்து பத்திரமாக சமூக விலகலை பின்பற்றி வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். இதனை யாரும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றும் அந்தந்த மாநில அரசுகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்! என்று எச்சரித்துள்ளார்.


என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது – நடிகை குஷ்பு

Quick Share

நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு கொரோனா தொடர்பான பிரதமர் மோடியின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து டுவீட்களை வெளியிட்டு வந்தார். ஆனால் கடந்த 2 நாட்களாக அவருடைய ட்விட்டர் தளத்தில் எந்தவொரு டுவீட்டுமே வெளியாகவில்லை. தற்போது தனது டுவிட்டர் கணக்கின் நிலை தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அல்லது பாஸ்வேர்டு மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டது என டுவிட்டர் எனக்கு ஒரு செய்தி அனுப்பியது. மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து மூன்று முறை எனது கணக்குக்குள் நுழைய முயன்றுள்ளனர். கடந்த 48 மணிநேரங்களாக என்னால் என் கணக்குக்குள் லாக் இன் செய்ய முடியவில்லை. பாஸ்வேர்டையும் மாற்ற முடியவில்லை.
டுவிட்டர் தரப்பிலிருந்து உரிய உதவி கிடைக்கவில்லை. எனது கணக்கு ரத்தாக வாய்ப்புகள் உள்ளன என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். நன்றி. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்”. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

கனிகாவுக்கு தணிந்த கொரோனா…பெரு மூச்சு விடும் கனிகா கபூர் !!

Quick Share

பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த மாதம் 9-ம் தேதி லண்டனிலிருந்து மும்பை வந்தார். பிறகு அவர் லக்னோவில் முக்கிய அரசியல்வாதிகள் பங்கேற்ற ஒரு விருந்தில் கனிகா கலந்து கொண்டார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தனது சொந்த ஊரான லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்தடுத்த கொரோனா சோதனையில் கொரோனா மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தனி வார்டில் இருந்த கனிகா மருத்துவமனை சரியாக இல்லை குறை கூறினர். அவருக்கு 4 முறை மாதிரி எடுத்து சோதனை செய்ததில் பொசிட்டிவ் ரிசல்ட் வந்தது. ஏப்ரல் 4-ஆம் தேதி 5வது முறையாகப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்தது. அவர் தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

#Breaking “அந்த மனசு தான் சார் கடவுள்”, தல அஜித் கொரோனா நிவாரண நிதிக்கு கொட...

Quick Share

கடந்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைகளுக்காக பி.எம் கேர்ஸ் நிதியை அமைத்திருந்தார், மேலும் நாடு முழுவதும் உள்ள நட்சத்திரங்கள் பிரதமருக்கும் மாநில முதல்வர் நிவாரண நிதிகளுக்கும் பங்களிக்கத் தொடங்கினர்.

இப்போது சமீபத்திய செய்தி, தல அஜித் பிரதமர் பராமரிப்பு நிதிக்கு 50 லட்சம், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் மற்றும் ஃபெஃப்ஸி (FEFSI) ஊழியர்களின் நலனுக்காக 25 லட்சம் பங்களிப்பும் செய்துள்ளார் , மொத்தம் 1.25 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு பங்காளித்துள்ளார்.

சமீரா ரெட்டி யார்கூட பொழுதை ஓட்றாங்க பாருங்க..

Quick Share

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 
திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டுவந்தார். திருமணத்திற்கு பிறகு தனது இரண்டு குழந்தைகளுடன் சமீரா ரெட்டி முழு நேரத்தை செலவிட்டு வருகிறார். 
தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். அந்தவகையில் தற்போது தனது அன்பு குழந்தைகளின் அழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் .

சூரியின் சினிமா வாழ்க்கையில் விளையாடும் கொரோனா.! இயக்குனர் வெற்றிமாறனின் திடீர் முடிவு&...

Quick Share

வெற்றிமாறன் – சூரி கூட்டணி திரைப்படம் துவங்கியதிலிருந்தே பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இப்படம் மறைந்த தேசிய விருது பெற்ற கவிஞர் நா. முத்துகுமாரின் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ புத்தகத்தைத் தழுவி படமாக்க திட்டமிடப்பட்டது, பின்னர் மீரான் மொய்தீனின் ‘அஜ்னபி’ நாவலைத் தேர்ந்தெடுத்தனர். இந்த கதையில் ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா என பல வெளிநாட்டு இடங்கள் இருந்தன, ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அடுத்த சில மாதங்களுக்கு எந்தவொரு விமான பயணத்தையும் ரத்து செய்துள்ள நிலையில், தற்போது மற்றொரு பெரிய மாற்றத்தை இந்த கூட்டணி திட்டம் பெற்றுள்ளது.

வெற்றிமாறனும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதனால் தற்போது புதிய கதைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவும் ஒரு நாவலைத் தழுவி இருக்குமா அல்லது வெற்றிமாறனின் சொந்த திரைக்கதையை கொண்டதா இருக்குமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும் என கூறப்படுகிறது.

“குவாரன்டைனில் குதூகலம்” மீரா மிதுன் வெளியிட்ட வைரல் வீடியோ

Quick Share

மாடல் அழகியும் – நடிகையுமாக மீரா மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் போதை ஏரி புத்தி மாறி’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் – 3′ நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார். தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை, அரசியல் தொடர்பான கருத்துக்களையும் அடிக்கடி பதிவிட்டுத் தொடர்ந்து சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார்.

அண்மையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் 2-வது போஸ்டரில் விஜயின் போஸ் போலவே போஸ் கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “யார் யாரைக் காப்பி செய்தது.. இது டிசம்பர் 2019-ல் எடுக்கப்பட்ட எனது கிங்பிஷ்ஷர் ரேம்ப் ஷோ புகைப்படம். எனவே இதற்குப் பதில் தெரிந்துவிட்டது” என்று பதிவிட்டார். இதைப்போல அடிக்கடி சர்ச்சைக்கு ஆளாகும் சூப்பர் மாடல் மீரா நேற்று யோகேஷ் என்பவருடன் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு தான் காதலில் விழுந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த தனிமைப்படுத்துதல் தொடரும் என்று தெரிவித்த மீரா மிதுன் தற்போது அடுத்த வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கின்றது.

அமேசானில் வெளியாகப்போகும் மாஸ்டர்.. அடேய்! அப்பனா பட்டாசு, பால் அபிஷேகம்லாம் வீட்லதானா

Quick Share

தளபதி விஜய்யின் படம் என்றாலே பல சோதனைகளை தாண்டிதான் களம் காணும் என்பது உண்மை. ஏனென்றால் அரசியல் களத்தை அவர் நெருங்கி விடக் கூடாது என்று பின்னணியில் பல செயல்கள் நடக்கும் அதில் ஒன்றுதான் தற்போது விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை மற்றும் பல.

ஏற்கனவே இதை நிறைய அலசி விட்டோம், தற்போது விதி விளையாடி கொண்டிருக்கின்றது. மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்து வரும் 9ம் தேதி படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பெரிய மற்றும் சிறிய படங்கள் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் வெளியீடு மே30ஆம் தேதி வெளிவரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது ஊரடங்கு உத்தரவால் மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவாக வெளிவர வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், ஏற்கனவே மாஸ்டர் படத்திற்கு அதிக வட்டியில் பணம் வாங்கி படத்தை முடித்து விட்டதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். இதனால் கூட விரைவில் படத்தை வெளியிட வேண்டும் என்ற கட்டாயத்தில் படக்குழு இருப்பதாக தெரிகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியே வந்தால் மட்டுமே தெரிய வரும். எது எப்படியோ தளபதி விஜய்யை பெரிய திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே கமலஹாசன் படங்களை டிடிஹெச், ஆன்லைன் போன்றவற்றில் ரிலீஸ் செய்யுமாறு கோரிக்கை வைத்து வருகிறார். அதனை மாஸ்டர் செயல்படுத்திவிடுமோ என்று ரசிகர்கள் பயப்படுகின்றனர். இது கூட விளம்பரத்திற்கான ஒரு செய்தியாக பரவ விட்டுருக்கலாம் ஆனால் உண்மையானால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.


தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தன் ஒருவருட வருமானத்தை கொடுத்து உதவிய தயாரிப்பாளர் !!

Quick Share

இந்தியாவில் வேகமாக கொரோனா பரவி வருவதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வேலை இல்லாமல் கையில் காசு இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் பலபேர் தவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் கஷ்டப்படும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

தற்போது பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகையுமான ஏக்தா கபூர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தன்னுடைய ஒரு வருட சம்பளத்தை கொடுத்து உதவியுள்ளார். இதைப் பற்றி தெரிவித்த அவர் என்னுடைய ஓராண்டு சம்பளம் 2.5 கோடி தொகையை ஊரடங்கு காலகட்டத்தில் பாதித்த தொழிலாளர்களுக்கு வழங்குகிறேன் என தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடிகர் சல்மான் கான் பாலிவுட் திரையுலகின் 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்து உதவியுள்ளார். இந்தத் தொகையை அவர்களது வங்கி கணக்கில் அடுத்த மூன்று மாதத்திற்கு நேரடியாக செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டாள்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதே !! “ஜாலியா இருக்க பட்டாசு வெடிக்கிறார்கள̶்...

Quick Share

நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூர் ட்விட்டரில் நேற்று நடந்த சம்பவங்களை பற்றி கருத்து பதிவிட்டுள்ளார். நேற்று மக்கள் விளக்கு மற்றும் டார்ச் லைட் பதிலாக பட்டாசுகள் வான வேடிக்கைகளும் வெடித்து அமர்க்கள படுத்தினர். அவர் பதிவிட்ட கருத்தில் நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை பட்டாசு சத்தம் அதிகமாக உள்ளது. ஏன் இப்படி மக்கள் செய்கிறார்கள் என பதிவிட்டார்.

இது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த கருத்துக்கு எதிராக ஒரு நபர் சோனம் கபூர் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கு என்ன அர்த்தம் என சோனம் கபூரை கேட்டுள்ளார்.

எரிச்சலடைந்த சோனம் கபூர் ஒரு விஷயத்தை செய்வதற்கு நேரம் காலம் உள்ளது என தெரிவித்து, முட்டாள்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதே !! அவர்கள் கீழே இழுத்து சென்று மோசமாக நடந்துகொள்வார்கள்” என்ற மார்க் டுவைன் என்பவரின் சொற்களை பதிவிட்டுள்ளார்.

சோனம் கபூருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது அப்போது அசோக் பண்டிட் என்னும் இயக்குனர் சோனம் கபூரை கடுமையாக சாடினார், சோனம் கபூரின் கருத்துக்கு எதிர் கருத்து கூறிய அசோக், இது தீபாவளி, தீபாவளி இல்லை என்பது முக்கியமில்லை, மக்கள் ஜாலியா பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள் இந்த கஷ்டத்தை காலத்திலேயும் ஜாலியா பட்டாசு வெடித்து கொண்டாடுவதில் என்ன இருக்கு..”

பிறகு கடுப்பான சோனம் கபூர் அமைதியாக பதிலுக்கு பதில் கூறுவதை நிறுத்திவிட்டார்.

மூன்றே மாதத்தில் இத்தனை படங்களா..! வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்த யோகி பாபு..

Quick Share

தமிழில் சுப்ரமணியன் சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘யோகி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் யோகி பாபு.

இவர் இதன்பின் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து முதன் முறையாக டாப் ஹீரோவுடன் இவர் இணைந்து நடித்த படம் விஜய்யின் வேலாயுதம்.

மேலும் ரஜினி, அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அருண் விஜய், உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த தர்பார் படத்தில் கூட இவரது நகைச்சவை திறன் பாராட்டுக்கூறியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்ற இரண்டு வருடத்தில் மட்டும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். ஆனால், தற்போது இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம் “கடந்த 3 மாதங்களில் மட்டும் 40 படங்களில் கமிட்டாகியுள்ளது மிக சந்தோஷத்தை தருகிறது” என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் யோகி பாபு.

மேலும் இது எந்த ஒரு நடிகரும் செய்யாத ஒரு சாதனை என்று கூட கூறலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல திரையுலக பிரபலங்களின் நேற்றைய புகைப்படங்கள் !!

Quick Share

ஏப்ரல் 5-ம்தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி இன்றிரவு சரியாக 9 மணிக்கு இந்தியாவில் உள்ள மக்கள் தங்களது வீட்டில் மின்சார லைட்டுகளை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றினர்.

இந்த விளக்கேற்றும் நிகழ்வில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் முன்பு கையில் மெழுகுவர்த்தியுடன் நன்றி தெரிவித்தார். மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கேப்டன் விஜயகாந்த், நடிகை தமன்னா, இளைய திலகம் பிரபு மற்றும் பலர் கையில் விளக்கேந்தி நின்றனர்.




You cannot copy content of this Website