உண்மையை போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்!! பாஜக நிர்வாகியின் மகனுடன் திருமணமா ??
கீர்த்தி சுரேஷுக்கும் பெரிய பணக்கார வீட்டுப் பையனுக்கும் விரைவில் திருமணம் என்று வெளியான செய்தி குறித்த உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.
2020ம் ஆண்டு கீர்த்தி சுரேஷுக்கு பிசியான ஆண்டாக அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கீர்த்தி. இந்நிலையில் கீர்த்திக்கும், தேசிய கட்சியை சேர்ந்த பிரபலத்தின் மகனுக்கும் விரைவில் திருமணம் என்கிற தகவல் வெளியாகி தீயாக பரவியது.
கீர்த்தியின் தந்தை பாஜகவில் ஆக்டிவாக இருப்பவர். அதனால் பாஜகவில் இருக்கும் முக்கிய நபர் ஒருவரின் மகனுக்கு தன் மகள் கீர்த்தியை மணமுடித்து வைக்க அவர் முடிவு செய்ததாக கூறப்பட்டது. இது குறித்து கீர்த்தி கூறியதாவது, இந்த செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது எப்படித் தான் துவங்கியது என்று தெரியவில்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
27 வயது தானே ஆகிறது, அதற்குள் ஏன் கீர்த்தி திருமணம் செய்ய வேண்டும். நயன்தாராவின் இடத்தை பிடிக்க ஆசைப்பட்டு விட்டு இப்படி திருமணம் செய்தால் மார்க்கெட் காலியாகிவிடுமே என்று ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். கீர்த்திக்கு திருமணம் எல்லாம் இல்லை என்கிற தகவல் தெரிந்தால் ரசிகர்கள் நிம்மதி அடைவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.