கிச்சனுக்கு போனதே இல்லனா இப்படிதான், டப்பால லேபில் எழுதி கொடுக்கணும் – தீபிகா ...
கொரோனா வைரசால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் பல திரையுலக நடிகர்கள் நடிகைகள் வீட்டில் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகின்றனர். பார்ட்டி, ஷூட் வாழ்க்கையே கலர்புல்லாக போயிருந்த பலருக்கு சமையலறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நடிகை தீபிகா படுகோனுக்கு வந்துள்ளது.
தினமும் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது வீட்டிலிருக்கும் மளிகை சாமான் பொருட்களுக்கு லேபில் எழுதி டப்பாவில் ஒட்டி வருகிறார். ஷூட்டிங் சமயலறை தவிர தன வீடு சமயலறைக்கு போகாத நடிகைகள் ப.பருப்பு உ. பருப்பு க.பருப்பு எது என்ற வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றனர். பல நடிகைகள் பேட்டிகளில் இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
தீபிகா படுகோன் இந்த 21 நாட்களில் தன் சமையலறையில் என்ன பொருள் உள்ளது என்பதை அடையாளம் கண்டு. சமையலில் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார். தினமும் அவருடைய அப்டேட் அப்டேட்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.