லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய்-க்கு தனது 64-வது திரைப்படமாக ‘மாஸ்டர்’ அமைந்துள்ளது. இத்திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகி இணையத்தில் செம வைரலானது, இன்றும் வைரலாகி கொண்டேதான் இருக்கிறது.
இதனையடுத்து, இந்த படத்தின் 2-வது சிங்கிள் ‘வாத்தி கம்மிங்’ பாடல் சமீபத்தில் வெளியானது. நம்ம சென்னை ஸ்லாங்கில் தாறுமாறான தர லோக்கல் பாடல் வரிகளுடன், செம குத்து பீட்டில் இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
தற்போது குட்டி ஸ்டோரி பாடல் சுமார் 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராஜு முருகன் மற்றும் VJ. ஹேமா சின்ஹா கடந்த 2016-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
2014-ஆம் ஆண்டு வெளியான ‘குக்கூ’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு ஜோக்கர், ஜிப்ஸி அடுத்தடுத்து தரமான படைகளை கொடுத்துள்ளார். அணைத்து படங்களுக்கும் நல்ல விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றது.
சமூக பொறுப்புடன் படம் எடுக்கும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்த ராஜு முருகன், வி.ஜே.ஹேமா சின்ஹாவை கரம் பிடித்தார். 64-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றார்.
தற்போது வர தந்தை ஆகியுள்ளார். பிரசவத்திற்கு பிறகு தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக செய்தி வெளியானது.
விஜய்யின் 65-வது படத்தின் இயக்குனர் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமாக உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெற ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், விஜய் குறித்த ஒரு சூப்பரான தகவல் ஒன்று வைரலாகிவருகிறது. அது என்னவென்றால், ‘மாஸ்டர்’ விஜய் ராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பாகுபலி’ என்ற பிளாக்பஸ்டரைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிவரும் மெகா பட்ஜெட் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் கேமியோ வேடத்தில் விஜய்யை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த ‘ரவுடி ரத்தோர்’ எனும் பாலிவுட் படத்தில் ஒரு பாடலுக்காக விஜய் கடைசியாக ஒரு கேமியோ வேடத்தில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் பிரபாஸ் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக இன்று ரூ. 4 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதில் ரூ. 3 கோடி பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கும் மற்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா ரூ .50 லட்சம் நிதி கொடுத்துள்ளார்.
நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டேவுடன் ஜார்ஜியாவில் “பிரபாஸ் 20” படப்பிடிப்பிலிருந்து சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். வெளிநாடிலிருந்து விமானம் மூலம் பயணித்து வந்ததால் நடிகர்கள் இருவரும், அவரவர் வீடுகளில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கடைபிடித்துவருகின்றனர்.
கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானார் சேதுராமன் (வயது 36). நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் தொடர்ந்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
36 வயதாகும் இவருக்கு சில வருடங்களுக்கு முன்னாள் தான் திருமணம் நடந்தது. தற்போது நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் சேதுவின் மரணம் பற்றி சிலர் வதந்தி பரப்பியுள்ளனர். அவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தான் இறந்தார் என வதந்தி பரவிய நிலையில் சேதுவின் நண்பர் அஸ்வின் விஜய் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். “Dr.சேதுராமன் மாரடைப்பால் தான் இறந்தார், கொரோனா வைரஸ் அல்ல. வதந்தி பரப்பாதீங்க” என அவர் தன இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஏன் 30 வருட நட்பு. இந்த உலகத்திற்காக பல நல்ல விஷயங்கள் செய்ய முடிவெடுத்திருந்தோம். நீ இப்போது சென்றுவிட்டாய்.. என் ஒரு பகுதியையும் எடுத்து சென்றுவிட்டாய் என வருத்தம் தெரிவித்தார்.
இந்த துயர செய்தியை கேட்டு பலர் அதிர்ந்துபோயுள்ளனர். சேதுராமனின் இறந்ததை நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் உறுதிபடுத்தி பதிவு செய்துள்ளார். சேதுவின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது அப்போது நடிகர் சந்தானம் சேதுவின் உடலை பார்த்து கண்கலங்கி நின்றார். மேலும் அவரது உடலை தோளில் தூக்கி சென்றார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் 21 நாட்கள்
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அரசங்கத்துக்கு ஒத்துழைப்பௌ
அளித்து மக்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அதேபோல் நடிகர்
நடிகைகளும் தங்கள் வீட்டிலிருந்து சமூக வலைதளங்களில் பதிவுகளை
பகிர்ந்துவருகின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால்
இணைந்து நடித்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய திரைப்படம்
‘கோமாளி’. இப்படம் ரசிகர்களிடையே, குறிப்பாக 90’ச் கிட்ஸ் இளைஞர்களிடையே
பெரும் வரவேற்றது. இப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே ஜெயம் ரவியின் பள்ளி
பருவத்து காதலியாக முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும்,
ஜிவி பிரகாஷ் நடித்த ‘வாட்ச்மேன்’ மற்றும் வருண் நடித்த ‘நாய்க்குட்டி’
போன்ற படங்களில் நடித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த இவர் பல கன்னடம்
படங்களிலும், கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றவர். உடற்பயிற்சி
மற்றும் நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் சமுக வலைதளங்களில் எப்போதும்
இயக்கத்தில் இருப்பவர்.
தனது ஒர்க்அவுட் வீடியோக்களைப் பகிர்வதில் பெயர் பெற்ற சம்யுக்தா ஹெக்டே, இப்போது இணையத்தில் ஒரு அருமையான டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்ட்தடில் அவர் “2-வது லாக்டவுன் நாள். இசை மற்றும் நடனம் என்னை குணமாக்குகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் என்னை மிகவும் நன்றாக உணரவைக்கிறது. ஒரு நடன வீடியோவை பதிவு செய்யவும் என்று என்னிடம் கேட்கும் எனது நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்காக ஒரு வீடியோ இதோ. இது எனக்கு பிடித்த ஒரு பாடலுடன், ஒரு ஃப்ரீஸ்டைல் நடனம்” என்று பதிவிட்டுள்ளார். சம்யுக்தாவின் ஆற்றல்மிக்க மற்றும் சிரமமில்லாத நடன நகர்வுகள் கொண்ட இந்த வீடியயோ தற்போது செம வைரலாகிவருகிறது.
நடிகையும் அரசியல் பிரபலமுமான குஷ்பு இந்தியா பிறப்பித்துள்ள தடை உத்தரவால் வீட்டில் தனது நேரத்தை கழித்து வருகிறார். தன் வீட்டில் மாடியில் இயற்கை எழில் சூழ்ந்துள்ளவாறு அமைத்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் செடிகள் பூக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த ஹவுஸ் கார்டன் பற்றி தனது த்விட்டேர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வீட்டில் என்னுடைய பொழுதுபோக்கு என்பது என் பசுமை குழந்தைகளுடன் இருப்பதே என பகிர்ந்துள்ளார்.
மோர்டர்ன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் குஷ்பூ பூக்களுடன் இருப்பதால் தான் என்றென்றும் பூ போல அழகாக உள்ளாரோ எனவோ !!
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் தொடர்ந்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
36 வயதாகும் இவருக்கு சில வருடங்களுக்கு முன்னாள் தான் திருமணம் நடந்தது. தற்போது நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார். இந்த துயர செய்தியை கேட்டு பலர் அதிர்ந்துபோயுள்ளனர். சேதுராமனின் இறந்ததை நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் உறுதிபடுத்தி பதிவு செய்துள்ளார். திரையுலகின் பல பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனா தந்து ட்விட்டர் பதிவில் “கடவுளின் விளையாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.
கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானார் சேதுராமன்.
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் தொடர்ந்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
36 வயதாகும் இவருக்கு சில வருடங்களுக்கு முன்னாள் தான் திருமணம் நடந்தது. தற்போது நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார். இந்த துயர செய்தியை கேட்டு பலர் அதிர்ந்துபோயுள்ளனர். சேதுராமனின் இறந்ததை நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் உறுதிபடுத்தி பதிவு செய்துள்ளார். திரையுலகின் பல பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஆளும் மாநில மற்றும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கிறார், ஆனால் அதே அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் சில திட்டங்களை அறிவிக்கும் போதெல்லாம் பாராட்டவும் செய்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்கை அறிவித்த போது தனது ட்விட்டர் பக்கத்தில் “உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்” என்று கடுமையாக சாடினார்.
நாடு முழுக்க முடக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவசிசமற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்படும் நிலை ஏற்பபட்து. இதன் காரணமாக உருவான நிதி சிக்கல்களைச் சமாளிக்க ஏழை மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நிவாரண தொகுப்பினை அறிவித்த நிதியமைச்சர், “யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள்” என்று கூறி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் கஷ்டங்களை தணிப்பதில் அரசு உடனடி கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
அந்த அறிவிப்பையடுத்து, நடிகர் ககல் ஹாசன் தனது பழைய ட்வீட்டை இணைத்து தற்போது பிரதமர் மோடியையும், நிதி அமைச்சரையும் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அன்புக்குறிய நிர்மலா சீத்தாராமன் மற்றும் பிரதமர் மோடி. ஏழைகளைச் சென்றடைந்ததற்கு நன்றி. அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்ற எனது அச்சத்தின் வெளிப்பாடாகவே பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இந்த நெருக்கடியின் போது அவர்களுக்கு ஆதரவளிக்கும் இந்த செயல் மிகவும் பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.
அதையடுத்து மக்கள் பலரும் இந்திய அரசாங்கத்தை பாராட்டும் அதே நேரத்தில் கமல் ஹாசனின் குரலுக்காகவும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.
சில தினங்களுக்கு பாடகி மற்றும் நடிகையான கனிகா கபூர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகி கனிகா கபூரின் நடவடிக்கை பற்றி கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தலைமை நிர்வாகி RK திமன் தெரிவித்துள்ளார் அதோடு அவர் ஒரு நோயாளி போல் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் தன்னுடைய சினிமா ஸ்டார் ஸ்டேட்டஸை காட்டக்கூடாது என தெரிவித்தார்.
கனிகா கபூருக்கு மருத்துவமனையின் சமையலறையிலிருந்து சாப்பாடு வழங்கி வருவதாகவும் மற்றும் அவருக்கென்று டிவி, ஏசி போன்ற வசதிகளை செய்துள்ளதாக தெரிவித்தனர். இப்படி இவ்வளவு சகல வசதிகளும் செய்து கொடுத்தபோதும் அவர் அது சரியில்லை இது சரியில்லை என்று குறைகூறி கொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்தனர்.
கன்னா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் வாலிப ராஜ என்ற படத்தில் கமிட் ஆனார். இப்படத்தில் விசாகா சிங், விடிவி கணேஷ், தேவதர்ஷினி, மற்றும் பட்டிமன்றம் ராஜா உள்ளியிட்ட லீடிங் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சந்தானம் மற்றும் விடிவி கணேஷுடன் மூன்றாவது படமான சக்க போடு போடு ராஜாவில் இவரின் கேரக்டர் மிக முக்கியமானது. அதன் பிறகு இவர் 50/50 என்ற படத்தில் சுருதி ராமக்ரிஷ்னன் மற்றும் பாலசரவனுடன் நடித்தார். இந்நிலையில் இவர் மாரடைப்பால் இறந்துள்ளது சினிமா துறையினரிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.