சினிமா

5 மிருகங்களில் ஒன்று மட்டும் தப்பித்துவிட்டது – நடிகை கஸ்தூரி ஆவேசம்

Quick Share

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு குற்றவாளிகளில் நான்கு பேர் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றியதை நாடே கொண்டாடி வருகிறது. நிர்பயாவின் ஆன்மா இன்று தான் சாந்தியடையும் என்று சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். தன் மகளின் ஆன்மா சாந்தியடைந்ததாக மனநிறைவுடன் தயார் காணப்பட்டார்.

நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நிர்பயா வழக்கில் கடைசியாக ஒருவழியாக மனித மிருகங்கள் நால்வருக்கு தண்டனை கிடைத்துவிட்டது. இதில் ஒருவர் மட்டும் சட்டத்தின் ஓட்டைகள் மூலம் தப்பித்துவிட்டார். அவன் கொரோனா வைரஸ் அல்லது பேருந்து விபத்து சிக்கி மரணம் அடைவான் என்று நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பதும், இன்னொரு குற்றவாளி 18 வயது கீழ் உள்ள மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தண்டனை பெற்று விடுதலை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படத்தில் சூர்யாவுக்கு இப்பொடியோரு கதாபாத்திரமா ??

Quick Share

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் இதற்கிடையில் ஹரி இயக்கும் அருவா படத்தில் சூர்யா நடிப்பார் என்ற அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாகவும், அவர்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தட..புட.. ஏற்பாடுகள் முன்னணி நடிகரின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து !!

Quick Share

திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் பதிவுகள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். #washchallenge போன்றவற்றை செய்து வருகின்றனர்.

தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரணின் பிறந்த நாள் வரும் மார்ச் 27ல் வருகிறது. தெலுங்கில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாட முன் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரேம் சரணின் பதிவில், “கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக பொதுமக்கள் கூட்டமாகக் கூட வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. ஆகவே, இந்த ஆண்டு என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் ரசிகர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காரியங்களிலும் ரசிகர்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு ராம் சரண் கூறியிருக்கிறார்.

மாஸ்டர் படவிழா சம்பவம், சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்ட நடிகை !

Quick Share

கடந்த 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கௌரி கிஷன் மொத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

ஒவொருவரின் பெயரை குறிப்பிட்டு பேசியபோது, தவறுதலாக நடிகர் சாந்தனுவை “சாந்தனு மேம்” என்று மேடையில் கூறிவிட்டார். அரங்கில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர். இதை சுதாரித்துக் கொண்ட கௌரி கிஷான் சாந்தனு சார் என்று உடனடியாக மாற்றிக் கூறினார்.

கௌரி கிஷனை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வந்தனர். இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் கௌரி.

விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் சிறுவயது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் கௌரி கிஷன். இவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜோதிகாவின் படத்தையும் விட்டு வைக்காத காரோணா!!

Quick Share

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின்களில் ஜோதிகாவும் ஒருவர். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனது அனைவரும் அறிந்ததே.

இதை தொடர்ந்து ஜோதிகா 8 வருடங்களுக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார், அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின்
மொழி ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.

இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் அடுத்து பொன்மகள் வந்தாள் என்ற படம் உருவானது, இப்படத்தை சூர்யா தயாரித்து இருந்தார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை சத்யம் சினிமாஸில் நடைப்பெறுவதாக இருந்தது.

ஆனால், கொரோனோவின் அச்சத்தால் தற்போது இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக கொரோனோவால் பல சினிமா பிரபலங்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், மாஸ்டர், சூரரை போற்று படங்கள் ரிலிஸாவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.

அதோடு வலிமை, மாநாடு போன்ற படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

நம்ம நிவேதா தாமஸா இது!! இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படம் உள்ளே…

Quick Share

மலையாள திரையுலகின் மூலம் தனது திரை பயணத்தை துவங்கினார் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் தமிழில் கூட பல படங்களில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆம் தளபதி விஜய்யின் குருவி படத்தில் கூட அவருக்கு தங்கையாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் ஜில்லா, பாபநாசம், தர்பார் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை நிவேதா.

இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகை என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் வெளிவந்துள்ளது.

இதில் மிக அழகாக ரசிகர்களின் கண்களை ஈர்க்கும் வகையில் தெரிகிறார் நடிகை நிவேதா தாமஸ்.

இதோ அந்த அழகிய புகைப்படம்…

மாமியாரோடு ஆட்டம் போட்ட நடிகை சமீரா ரெட்டி… வயசானாலும் ஸ்டைல் போகல !!

Quick Share

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் நடிகை சமீரா ரெட்டி தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களில் சமீரா முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதனை தொடர்ந்து அசல், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார்.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி அடிக்கடி புகைப்படங்கள் வீடியோ பதிவிட்டு வருகிறார். தற்போது தனது மாமியாருடன் மாடர்ன் உடை அணிந்துகொண்டு அசத்தலாக நடனம் ஆடியுள்ளார். சமீராவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமீரா ரெட்டி அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து கொண்டு வருகிறார்.

மாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் “J.D Dean of Students” என தகவல் வெளியானது !!

Quick Share

மாஸ்டர் படத்தில் விஜய் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பில் அவர் அணிந்திருக்கும் ID கார்டின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆனது.

மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்திருப்பதால் ரசாகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் விஜயின் நிஜ வாழக்கை நண்பர்களும் படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.

மாஸ்டர் படத்தில் விஜயின் பெயர் தற்போது வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் “ஜான் துரைராஜ் என்று வெளியானது.

விஜய் சேதுபதி மகன் “சூப்பர் டீலக்ஸ்” அஸ்வந்தின் அறிவுபூர்வமான வீடியோ –...

Quick Share

உலக நாடுகள் பலவற்றிற்கு தற்போது பெரும் சவாலாக இருப்பது கொரோனா வைரஸ் உயிர்க்கொல்லி நோய் தான். இதன் பாதிப்பால் உலகளவில் பலர் உயிரிழந்துள்ளனர்.

சிலர் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியாவிலும் இந்நோய் தாக்கம் மிகுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை செய்து வருகிறது.

சினிமா பிரபலங்களும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில்
தற்போது டிவி, சினிமா என கலக்கி வரும் அஸ்வந்த் கொரனோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

இதில் மிக எளிமையாகவும் அறிவுப்பூர்வமாகவும் மிகுந்த தைரியத்துடனும் பேசுகிறார். கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம். அதெல்லாம் போய்விடும் என கூறியுள்ளார்.

கடைசியில் வேறு வழியின்றி’… “தமன்னாவும் அந்த நிலைக்கு வந்துவிட்டார்”.

Quick Share

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் சூர்யாவின் வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் தான் உச்ச நடிகையாக திகழ்கிறார். கடந்த 12 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக உள்ளார்.

சில நடிகைகள் ஐந்து ஆறு வருடங்களில் இருக்கும் இடம் காணாமல் போகும் நிலையில் இவர் மட்டும் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் காமெடி , கவர்ச்சி , ஹோம்லி என அனைத்து கேரக்டரிலும் நடிக்க கூடியவர். சமீபத்தில் நடிகை தமன்னாவின் வாழ்க்கை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் ஓப்பனாக பேசிய தமன்னா

கேள்வி :

நீங்க வருடத்திற்கு நான்கு ஐந்து படங்களில் நடித்து வந்தீங்க இப்போது அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது மற்றவர்களைப் போல் அதிகமாக படங்களில் ஏன் நடிக்கவில்லை என கேட்கப்பட்டது.

பதில் :

நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களின் நிறைய நடித்து விட்டேன் . இன்னும் அதே மாதிரி நடிக்க வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தக் காரணத்தினால்தான் எனது படங்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என கூறினார்.

ஆனால், தற்போது மீண்டும் கவர்ச்சி காட்டி நடிக்க தயார் என தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த காலத்து தளபதி விஜய் புல்லிங்கோ…, வெட்ட வெளியில் ஆட்டம் போட்ட இயக்குனர் !!

Quick Share

ரத்னகுமார் மேயாத மான் எனும் படத்தில் அறிமுகமானார். சின்ன பட்ஜெட் படமாக வெளிவந்த அந்த படம், நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 2010ம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே – பஞ்சாப் போட்டியின் போதுவிஜய் ஆடிய போக்கிரி பொங்கல் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தற்போது மாஸ்டர் படத்திற்காக உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் ரத்தன குமார். 2020ம் ஆண்டில் அவருடன் இந்த அளவுக்கு மாஸ்டர் படத்தின் மூலம் நெருக்கமாகியுள்ளேன். தளபதி எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறார் என நன்றி கூறினார். தளபதிக்காக எதுவேண்டுமானாலும் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆடை படத்தில் துணிச்சலான கதையை தேர்ந்தெடுத்தார். தற்போது மாஸ்டர் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். விஜய் மாஸ்டர் பட இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் இவரின் வளர்ச்சியைப் பற்றி பேசினார்.

இயக்குனர் லோகேஷின் நண்பராக இருந்தாலும், இந்த படத்துக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் ரத்னா என அவரை குறிப்பிட்டு பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ரத்னகுமார். தளபதி ரசிகன் அன்றைக்கும் இன்றைக்கும் என்ற வித்தியாசம் பற்றி சுவாரசியமாக தெரிவித்தார் ரத்தினகுமார்.

ஹாய் ஐட்டம்.., என்று அழைத்தவரை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகை

Quick Share

அஜித் நடித்த பில்லா, விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான நடிகை நமீதாவை சமூக வலைத்தளம் மூலம் நெட்டிசன் ஒருவர் மிரட்டியுள்ளார்.

கவர்ச்சிக்கு பெயர் போனவர் நமீதா. ஒரு கட்டத்திற்கு மேல் உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ரசிக்க படாத நாயகியாக ஓரம் கட்டப்பட்டார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அரசியலிலும் இணைந்தார்.

நமீதாவை ஆபாச படங்களில் பார்த்ததாகவும், அந்த படங்களை வெளியிட போவதாகவும், நமீதாவின் சமூக வலைத்தள பக்கத்தை ஹேக் செய்து அதில் ஆபாச பதிவுகளை பதிவிடவுள்ளதாகவும் அந்த நபர் நமீதாவை மிரட்டியுள்ளார்.

பின்னர் தன்னுடைய அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து உங்களுக்கு தவறான மெசேஜ் அனுப்பி விட்டார்கள் என கூறினாராம் அந்த ரசிகர். இதற்கு பதிலடி கொடுத்த நமிதா, ‘முடிந்தால் செய்து கொள்’ என்று பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மிரட்டிய நபரின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு, இவர் போன்ற பெண்களை மதிக்க தெரியாதவர்களை சரியாக தண்டிக்க வேண்டும் என்றும், தன்னை அந்த நபர் ‘ஐட்டம்’ என்றே அழைத்து வருவதாகவும், பெண்கள் குறித்து இவர்கள் என்ன நினைத்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

நமிதாவின் இந்த பதிவு தீயாய் பரவி வருகின்றது.




You cannot copy content of this Website